வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு கூட, சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் பசி எடுக்கிறதா? இது போன்ற பொறுக்க முடியாத பசி கொடுமைகள் ஏற்படுவதற்கு காரணம், உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவது தான்.
நீங்கள் எவ்வளவு தான் துரித உணவுகளை வயிறு முட்ட சாப்பிட்டாலும், உங்களுக்கு சாப்பிட்ட திருப்தி என்பது கிடைக்காது. முழு சாப்பாடு எதாவது சாப்பிட்டால் தான் சாப்பிட்ட மாதிரியே இருக்கும். இது தவிர, அடிக்கடி பசி ஏற்படுவதற்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, மனஅழுத்தம், பதட்டம், சீரற்ற இரத்த அழுத்தம் போன்றவை கூட அதிகப்படியான பசி உணர்வை தூண்டக்கூடும்.
இதுபோன்று, அடிக்கடி பசி எடுக்கும் சமயங்களில் ஏதாவது சாப்பிட்டால் தான் வயிறு அமைதி அடையும். அப்படி, நாம் சாப்பிடும் சில உணவுப் பொருட்கள் இயற்கையாகவே பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளன.
நீங்கள் சாப்பிடும் சில உணவுகள் உங்களது, பசி உணர்வை குறைக்கும் என்றால் நிச்சயம் அது நல்ல விஷயம் தானே? இப்போது, இயற்கையாகவே அதிகப்படியான பசி உணர்வை குறைத்திட உதவும் .
உணவுகளின் பட்டியலை தான் இப்போது பார்க்கப் போகிறோம்... தாங்க முடியாத அளவில் பசி எடுக்கும் போது இவற்றை சாப்பிடுங்கள் போதும்...
பிஸ்தா நட்ஸ்களில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. எடை அதிகரிப்பு, மோசமான வளர்சிதை மாற்றம் மற்றும் மூளை செயல்பாடுகளுக்கு உதவும்
ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாகும். அதிலும் குறிப்பாக பிஸ்தாவில் வயிற்றில் உள்ள அமிலங்களை நடுநிலையாக்கும் குணம் உண்டு. அதன் மூலம் உங்கள் பசி உடனடியாக அடங்கிடும்.
ஆளிவிதை ஆளிவிதைகளை சூப்பர் விதைகள் என்றே கூற வேண்டும். அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவு புரதங்கள் உள்ளன. அவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வருவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
அதிலும், குறிப்பாக அதிகப்படியான பசியில் இருக்கும் போது ஆளிவிதைகளை சாப்பிடலாம். இது எதையாவது சாப்பிட வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தைத் தடுப்பதோடு, நன்றாகவும் உணருவீர்கள்.
வேர்க்கடலை வெண்ணெய் (Peanut Butter) நீங்கள் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது ஒரு ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெய் சாப்பிடலாம்.
உங்களது பசியைக் குறைக்க ஒரு ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெயே போதுமானது. வேர்க்கடலை வெண்ணெயில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் உள்ளன.
அவகேடோ வெண்ணெய் பழம் எனப்படும் அவகேடோ மிக உயர்ந்த ஆரோக்கிய நலன்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. இது வயிற்றில் உள்ள அமில உற்பத்தியைக் குறைத்து, செரிமானத்தை அதிகரிக்கும். மேலும், தேவையற்ற பசி கொடுமையை தடுத்திடவும் உதவக்கூடியது.
கிரேக்க தயிர் பொதுவாகவே, பெரும்பாலானோர் தங்களது தினசரி உணவில் தயிரை சேர்த்துக் கொள்கின்றனர். இது தயிரின் மற்றொரு வடிவமாகும்.
சாதாரண தயிரை விட இதில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இது சில பலனளிக்கும் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. வயிற்றில் செரிமானத்தை ஊக்குவிக்கும் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை உருவாகுவதை ஊக்குவிக்கிறது.
கிரேக்க தயிர் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே, அதனை உட்கொள்வதன் மூலம் திடீர் பசி ஏற்படுவதை குறைத்திட உதவும்.
Post a Comment
Post a Comment