ஏன்யா இப்படி பன்றீங்க.. இது உங்களுக்கே நல்லா இருக்கா? காண்டான யோகிபாபு ! என்ன நடந்தது தெரியுமா?

Post a Comment

தமிழ் சினிமாவில் தற்பொழுது புகழின் உச்சத்தில் இருக்கும் காமெடி நடிகர் யோகிபாபு. இவர் திரைக்காட்சிகளில் வந்து போனாலே சிரிப்பு அள்ளும். ரசிகர்கள் இவரை பெரிய காமெடி நடிகராக கருதி ரசித்து வருகிறார்கள். இவரின் டைலாக் டெலிவரி மற்றும் வித்தியாசமான "ஹேர் ஸ்டைல்" "பாடி லேங்வேஜ்" ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்து விடும்.

வடிவேலுவின் சரிவிற்கு பிறகு ஓரளவு காமெடி செய்பவராக யோகிபாபு உள்ளார். தற்பொழுது "புல்பார்ம்" இல் இருக்கும் இவருக்கு ஒரு பெரிய தலைவலி உருவெடுத்து உள்ளது. அது இதற்கு முன்பு அவர் சின்ன சின்ன வேடங்களில் நடித்த படங்களை, தற்பொழுது ரீலீஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்த படங்களில் யோகி பாபுவை கதாநாயகன் போல சித்தரித்து "போஸ்டர்" களை வெளியிடுகின்றனர்.

போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இது யோகிபாபுவின் படம் என நினைத்து தியேட்டர்களுக்கு வந்து ஏமாந்து போகின்றனர். இந்த தகவல் யோகி பாபுவின் காதுகளுக்கு எட்ட, அவர் இதனால் மனம் நொந்து போயுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் யோகிபாபு வெளியிட்ட வீடியோவில், இனிமேல் இப்படி தயவு செய்து செய்யாதீர்கள். இது என்னுடைய எதிர்காலத்திற்கும் நல்லதல்ல.. உங்களுக்கும் நல்லதல்ல. ரசிகர்களை ஏமாற்றுவதை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதே நேரத்தில் சில தயாரிப்பாளர்கள் என்னை முன்னிலைப்படுத்தி போடப்படும் போஸ்டர்களால் வருத்தப்பட்டு, என்ன எப்படி என என்னையே கேள்வி கேட்கின்றனர்.

இது எனக்கு தர்ம சங்கடமாக உள்ளது. எப்பொழுதே நடித்த சின்ன சின்ன வேடங்களை வைத்து எனக்கு என "ஷோலோ" வாக போஸ்டர் ஒட்டுவதை தயவு செய்து நிறுத்துங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து ரசிகர் ஒருவர் கூறுகையில், நான் ஒரு படத்திற்கு யோகிபாபுவின் பிரமாண்டமான போஸ்டரை பார்த்து போயிருந்தேன். கடைசிவரை யோகிபாபுவை அதில் காணவில்லை. பிறகுதான் தெரிந்த்து பின்னணியில் ஒரு காட்சியில் மட்டும் அவர் நடித்திருந்தார். இதனால் மிகப்பெரிய ஏமாற்றத்துடன் திரும்பினேன் என்றார்.

இதுபோல பல திரையரங்குகளில் தற்பொழுது யோகி பாபுவை முன்னிலை படுத்தி போஸ்டர் ஒட்டி காசு பார்ப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதனை தவிர்க்கும் வகையில் யோகி பாபு அந்த வீடியோவை வெளியிடுள்ளார்.


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter