வேலைவாய்ப்பு தகவலுக்காக கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி

கூகுள் நிறுவனம், வேலைவாய்ப்பு தகவல்களை வழங்கும் ‛கோர்மோ ஜாப்ஸ்' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஒரு முக்கிய பிரச்னையாக உள்ளது. இதனைப்போக்க, வேலைவாய்ப்பு தகவல்களை வழங்குவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 'லிங்க்ட்இன்' நாகுரி, டைம்ஸ்ஜாப்ஸ் உள்ளிட்ட சில தளங்கள் உள்ளன. இதற்கு போட்டியாக கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில், கூகுள் நிறுவனம் புதிதாக கோர்மோ ஜாப்ஸ் (Kormo Jobs) என்ற செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி, ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு வங்கதேசத்திலும், 2019ல் இந்தோனேஷியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் கோர்மோ ஜாப்ஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கென ஒரு சுயவிவரத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ரெஸ்யூம் உருவாக்கியப் பின், அதற்கு ஏற்ற வேலைகளையும் தேடி பயன்பெற முடியும். இந்த ஆப் மூலம் உங்கள் படிப்பு, வயது, இருப்பிடம், தகுதி உள்ளிட்ட சுயவிவரங்களின் அடிப்படையில் உங்களுக்கான பொருத்தமான வேலைகளைப் பரிந்துரை செய்யும். மேலும், துறை சார்ந்த வேலைகளையும் தனியாக தேட முடியும். ஏற்கனவே, கூகுள் இணையதளத்தில் ஜாப்ஸ் என்று தனிப்பிரிவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments