தினமும் பூண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் !

poondu sapiduvathal kidaikkum nanmaigal
அனுதினமும் பூண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அதில் உள்ள சத்துக்கள் மருத்துவ குணம் கொண்டவனை. அவற்றை ஒவ்வொருவரும் தினமும் ஏதாவது வடிவில் எடுத்து வர 100% விகித உடல் நலத்தைப் பெற்றிடாலம்.

பூண்டு எப்படி சாப்பிடுவது? 


வெறும் வயிற்றில், பூண்டு எடுத்து தோலுரித்து 2 முதல் 4 பல் எடுத்து இரண்டு மூன்றாக சிறிதாக குறுக்க வெட்டி, அதை ஒரு தட்டில் ஒரு பத்து நிமிடம் வரை போட்டு வைத்திருக்க வேண்டும். 

அதன் பின் அதை எடுத்து வாயில் மாத்திரை விழுங்குவதை போல போட்டு, குடிநீர் அருந்தி விழுங்கிவிட வேண்டும்.  அவ்வளவுதான். 

poondu nanmaigal


வேறொருமுறை: 

வெட்டி வைத்து, 10 நிமிட காத்திருப்பிற்கு பிறகு வாயில் போட்டு, பற்களால் இலேசாக கடித்து, பிறகு டம்ளரில் நீரெடுத்து ஊற்றி விழுங்க வேண்டும். 


பூண்டு பற்களை இரண்டு மூன்றாக வெட்டி துண்டாக்கிக்கொண்டு, அதனை ஏதாவது பாத்திரம் அல்லது பொருள் கொண்டு நசுக்கி, பத்து நிமிட காத்திருப்பிற்கு பிறகு வாயில் போட்டு, நீர் ஊற்றி விழுங்கலாம். 

எந்த நேரத்தில் சாப்பிடலாம்?


சாப்பிடுவதற்கு நேரம் காலம் என்று எதுவும் இல்லை. எனினும் முறையாக சாப்பிடுவதால் பலன் அதிகம் கிடைக்கும். 

அதிகாலை எழுந்து வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட அதன் பலன் வெகு விரைவில் கிடைக்கும். 

சாப்பிட்டப்பிறகு சிறிது நேரம் கழித்தும் கூட சாப்பிடலாம். 

இரவு உணவு உண்ட பிறகு படுக்கும்போது 2 அல்லது 4 பற்கள் பூண்டு எடுத்து, நன்றாக இரண்டு மூன்றாக வெட்டி வைத்து, 10 நிமிடம் கழித்து காரல் போன பிறகு சாப்பிடலாம். 

eating garlic with water in morning


பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்: 


  • நன்மைகள் ஏராளம் உண்டு. வெள்ளை பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கின்றன.  உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி திறனை அதிகரிக்கின்றன.
  • ஆண்களுக்கு ஆண்மை விருத்தி யாகும். விந்து கெட்டிப்படும். குழந்தை பேறு உருவாகும். 
  • கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும்.
  • வயிற்று பிரச்சனைகளும் அனைத்தும் நீங்கும். 
  • அஜீரணம் மற்றும் பசியின்மை  போக்கிவிடும். 
  • பச்சை பூண்டு மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும். 
  • அலுவலகம் மற்றும் வேலை இடங்களில் வேலைபளு அதிகம் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் தினமும் பூண்டு சாப்பிட மன அழுத்தம் குறையும். 

மேலும் கிடைக்கும் சில நன்மைகள்: 

  • இதய அடைப்பை போக்கும்.
  • சர்க்கரை அளவை குறைக்கும்.
  • ஆண்மை பெருக்கும்.
  • தொண்டை சதையை நீக்கும்.
  • நுரையீரல் சளியை போக்கும்.

benefits of garlic with empty stomach

image credit: beautyepic.com

இதில் அயோடின்,சல்பர், குளோரின் போன்ற சத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியா, சீனா, அமெரிக்கா என பல்வேறுபட்ட நாடுகளிலும், உணவில் பூண்டு இடம்பெற்றுள்ளன. 

குறிப்பாக இந்திய சமையல்களில் பூண்டின் பங்கு அதிகம். நறுமண பொருளாக இது இருப்பதால் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 

garlic eating with water


ஆனால், தினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அப்படி சாப்பாட்டுவரும்பொழுது தானாகவே நெஞ்சுசளி குறைதல், மூச்சுக்குழாய் சளி, முகத்தில் உள்ள அறைகளில் உள்ள சளி கரைதல், உடல் எடை குறைதல், ஆண்மை அதிகரித்தல், மன அழுத்தம் குறைதல், அஜீரண கோளாறுகள் சரியாதல், குடல் புழுக்கள் அழிதல், மகளிருக்கு மாதவிடாய் பிரச்னை தீருதல், கர்ப்பை பை கோளாறுகள் சரியாதல் என ஏராள நன்மைகள் கிடைத்து,  ஆரோக்கிய வாழ்வு வாழ முடிகிறது.

இதையும் படிக்கலாமே ! வயிறு வீக்கத்தை குறைக்க விரைவான வழிகள் !


Post a Comment

0 Comments