தமிழனின் பெருமையை பறைசாற்றும் விதமாக மகனுக்கு பெயர் வைத்த சிபி ராஜ்..தீயாய் பரவும் ட்வீட்..!!



வளர்ந்து வரும் நடிகர்களில் சிறந்த நடிகர் சிபிராஜ். பிரபல தமிழ் நடிகர் சத்யராஜின் மகன் இவர் என்பது நாம் அறிந்தது என்றாலும் கூட, இவர் அவரைவிட நடிப்பு, டான்ஸ், சண்டை என எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறார். ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சிபிராஜ், தமிழ் ஹீரோக்களில் சொல்லிக்கொள்ளும்படி இன்னும் பெரிய படங்களில் நடிக்கவில்லை. இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளியான முதல் படத்தில் நடிப்பு திறமையை காட்டிய பிறகு, வேறு நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் இவருக்கு அமையவில்லை என்பதே உண்மை.

வெற்றிவேல், சக்திவேல், மண்ணின் மைந்தன் போன்ற படங்களில் நடித்துள்ள சிபிராஜ் கடைசியாக சத்யா என்ற திரைப்படத்தில் நடித்திருந்திருந்தார். 2008ம் ஆண்டு சிபி ராஜ், ரேவதி என்ற பெண்ணிற்கு திருமணம் நடைபெற்றது.
இருவீட்டார் சம்மத த்தின் பேரில் நடைபெற்ற இந்த திருமண பந்தத்தின் விளைவாக அழகான மகன் ஒன்றை பெற்றெடுத்தனர். இதற்கு முன்பே சிபிராஜ், ரேவதி 10 ஆண்டுகால நண்பர்களாக இருந்தவர்கள்தான். ஒருவரையொருவர் புரிந்து கொண்டதில் நட்பு திருமண பந்தமாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. இந்நிலையில் அவர்களின் மகனிற்கு "தீரன் சின்னமலை" என பெயர் வைத்துள்ளனர்.

இது குறித்து அவர் ட்விட்டரில்,  சு தந்திரப் போ ராட்ட வீரர் தீரன் சின்னமலை குறித்து எழுதியுள்ள பதிவில், ”இந்திய சுதந்திர போ ராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எ திராக போ ராடி வீர ம ரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போ ராளி! இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமை படுகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக ஆங்கிலேயருக்கு எதிரான போரில் , போரிட்டு, வீர மரணமடைந்த தீரன் சின்னமலை பெயரை தன் மகனுக்கு வைத்து, பெருமை சேர்த்திருக்கிறார் நடிகர் சிபிராஜ்.

Post a Comment

0 Comments