ஆண் குறியை சுத்தம் செய்யும் முறைகள் ! ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்ள கூடிய தகவல்கள் உள்ளே !

Post a Comment
தினமும் குளிப்பதை போல, பல் துலக்குவதைப்போல, ஆண்குறியை சுத்தம் செய்வதும்..ஆண்களின் கடமை

முன் தோலிற்கும் ஆண்குறியின் தலைப்பகுதிக்கும் இடையே உருவாகும் Smegma என்ற பொருள் ஆண்குறியின் தலைப்பகுதிக்கும் முன்தோலுக்கும் இடையே நேரடியாக உராய்வை தடுக்கவும் எரிச்சல் உருவாக இருக்கவும் பயன்படுகிறது..

ஆனால் இதையே வருடக்கணக்கில் சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பும்..சில தோல் சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.. எனவே அதை தினசரி சுத்தம் செய்வது அவசியம்..

குளிக்கும் போது தினமும் ஒரு தடவையாவது முன்தோலை பின்நோக்கி தள்ளி பின் சுத்தம் செய்யவேண்டும்..இதற்கு மென்மையான அதிக வாசனையற்ற வெண்மை நிறமுள்ள சோப்பு பயன்படுத்தலாம்..

ஒரு நாளிற்கு ஒரு முறை சோப்பு பயன்படுத்தினால் போதுமானது.. ஒரே நாளில் இரு முறை..மூன்றுமுறை சுத்தம் செய்தால் நன்று.. ஒரு முறை சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்து..பின் வெறும் தண்ணீர் மட்டும் பயன்படுத்தி கழுவினால் போதுமானது..

தலைக்கு போடும் சாம்பூ..அதிகம் வாசனையுடைய சோப்புகள்..கெமிக்கல் உடைய சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வாசனைக்காக சென்ட் போன்றவைகளை பயன்படுத்த கூடாது...

எப்போதும் ஈரமில்லாமல் உலர்ந்த நிலையில் உறுப்புகளை வைத்திருக்க வேண்டும்.

இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து..தளர்வான பருத்தியால் ஆன உள்ளாடைகளை பயன்படுத்த வேண்டும்..வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு இரு முறை உள்ளாடைகளை மாற்றி பயன்படுத்த வேண்டும்..
இரவு தூங்க செல்லும் முன் உள்ளாடைகளை நீக்கிவிட்டு உறங்க வேண்டும்..
உடலுறவிற்குபின்னும், சுய இன்பம் செய்த பின்னும் ஆணுறுப்பை கழுவ மறக்க கூடாது..

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter