கொரோனாவால் 2 ஆயிரம் கோடி இழப்பு ! அடேங்கப்பா..அந்தளவுக்கு இவர் பிசினஸ் மேனா? ரொம்ப யோசிக்காதீங்க பாஸ்.. விவரம் உள்ளே..!


இந்த கொரோனா ஊரடங்கால் இவருக்கு மட்டும் 2 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் என்று பீலா விட்டு கொண்டிருக்கிறார். என்னடா இது.. ரோஜா கணவன் செல்வமணிக்கு எப்படி ? அப்போ இவர் என்ன பிசினஸ் செய்கிறார் என்று பலரும் பலவிதமாக நினைத்துக் கொண்டிருக்க, 


அப்பப்பா.. அது அப்படி இல்ல.. சினிமா துறை முடங்கியதால் சினிமாத் துறையின் மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் விவரமாக கூறியிருக்கிறார். 


இந்த 4 மாதங்களில் 2 ஆயிரம் கோடி என்றால், அதுவும் கணக்கு வராத பணம் எத்தனை கோடியோ? என்று ரசிகர்கள் ஏகமனதாக யோசித்து கேள்வி கேட்கின்றனர். 


சினிமாத்துறை பணம் செய்யும் துறை. அது பல வழிகளிலும், பலருக்கு தொழில் கொடுத்து, வருமானம் கொடுத்து வருகிறது. 


மிகப்பெரிய பண முதலைகள் இதில் முதலீடு செய்து, பெரும் இலாபம் சம்பாதித்தும் வருகின்றனர். இன்று வரை 2 ஆயிரம் கோடி இழப்பு என்றால்.. மற்ற சினிமா சார்ந்த வருமான எண்ணிக்கை எத்தனையோ? 


கேள்விகள் ஆயிரம். ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் நடுத்தர, வறுமைகோட்டு கீழ் உள்ள சினிமா தொழிலாளர்கள் தான். 


சாப்பாட்டுக்கு வழியில்லை நேரடியாக கண்ணீர் விட்டு கதறியழுத எத்தனையோ சினிமா நடிகர்களுகளுக்கு ஒரு சிலருக்கு மட்டும் ஊடகங்கள் வாயிலாக விஷயம் தெரிந்து உதவியிருக்கின்றனர்.


ஆனால் ஆயிரக்கண்க்கானோர், கூலி வேலை, பிச்சை எடுப்பது, திருடுவது, சாப்பாட்டுக்கு இல்லாமல் அரசை எதிர்பார்ப்பது என்ற நிலைமையிலேயே இன்னும் இருந்து கொண்டிருக்கின்றனர். 


சென்னையை மையப்படுத்தி சினிமாத்துறை இருப்பதால் பல கொள்ளை, கலவரங்கள் ஊடங்களுக்கு வராமலே சென்று விட்டன. 


பணமும் வசதியும் படைத்தவர்களுக்கு இல்லை தொல்லை. அது இல்லாமல் வயிறையும் பசியையும் கொண்டவர்களுக்கு மட்டுமே வருகிறது பெருந்தொல்லை. 


2 ஆயிரம் கோடி இழப்பு என்றால், அதை வைத்து எத்தனை லட்சங்கள் கோடி பணம் சம்பாத்திருப்பார்கள்? அந்த பண முதலைகள் இல்லாத ஏழை சினிமா கார ர்களுக்கு உதவி செய்தனரா? இல்லை இருப்பதை காப்பாற்ற தங்கத்தில் முதலீடு செய்து, தங்கள் பண, சொத்தை காப்பாற்றினார்களா ? 


வெளிப்படையாகவே அனைவருக்கும் தெரிய்யும். அவர்ரவர் பெண்டு பிள்ளைகள், வாரிசுகள் என்றும் கஷ்டப்படக்கூடாது என்று அவர்கள் முதலீடு செய்வதிலேயே மும்முரமாக இருந்தார்கள் என்று. 


கொடிய கொரோனோ வந்தும் கூட இன்னும் திருந்தா ஜென்மங்கள் இங்கே இருந்து கொண்டுதான் உள்ளனர். 

Post a Comment

0 Comments