பொற்காசு முறையை கைலாசாவில் அறிமுகப்படுத்தும் நித்தி - ஒரு பொற்காசு - 11.66 கிராம் தங்கத்திற்கு நிகரானது


விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் நித்தியானந்தாவின் கைலாசா நாடு குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருப்போர் ஏராளம். ரிசர்வ் பேங்க், தனி கரன்சி என அதிரடி காட்டி வந்த நித்தி, நித்தம் நித்தம் ஒரு செய்திகளை வெளியிட்டு பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறார்.  விக்கிபீடியா, என்சைக்ளோபீடியாவை எல்லாம் ஓரம் கட்டும் விதமாக வெளியானது நித்தியானந்தாபீடியா…

அவரைப் பற்றிய தகவல்களை 1974 முதல் 2020 ஆம் ஆண்டு இன்றைய தேதி வரை அனைத்தும் அப் டூ டேட் ஆக சேகரித்து வெளியிட்டார் நித்தி. தினம் தினம் நடக்கும் சத்சங்கம், போட்டோ ஷூட் என ஒன்று விடாமல் எல்லாம் அதிலே இருக்கும் வகையில் நித்தியானந்தாபீடியா வெளியானது.

இந்த பரபரப்புக்கு இடையே இப்போது தனது கைலாசா நாட்டின் கரன்சியை பற்றி பேசியிருக்கிறார் நித்தி. அதுவும் கைலாசா நாட்டின் கரன்சி காஸ்ட்லியானது.. முழுக்கவே பொற்காசுகள . ஆங்கிலத்தில் டாலர் என்றும், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா, புஷ்ப முத்ரா எனவும் அதற்கு பெயர் வைத்திருக்கிறார் நித்தி. கைலாசாவின் கரன்சி தமிழில் பொற்காசுகள் என்றழைக்கப்படும். ஒரு பொற்காசின் மதிப்பு இன்றைய தங்கத்தின் மதிப்பில் 11.66 கிராம்.

தங்கத்தின் மதிப்பில் ஒரு கிராம் 5 ஆயிரம் ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் கூட, ஒரு பொற்காசின் மதிப்பு கிட்டத்தட்ட 60 ஆயிரம் ரூபாய். உலக நாடுகளை எல்லாம் திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு நித்தியின் கைலாசா நாடு உதயமாகிக் கொண்டிருக்கிறது. இந்து மதத்தை பின்பற்றும் 56 நாடுகளில் நித்தியின் கரன்சி புழக்கத்தில் இருக்குமாம்.

அதிலும் உள்நாட்டுக்கு ஒரு கரன்சி. வெளிநாட்டு புழக்கத்திற்கு மற்றொரு வகை கரன்சி என கூறுகிறார், நித்தி. கைலாசா குறித்த இந்த அதிரடி அறிவிப்புகள் எல்லாம் பல ஆண்டு கால தயாரிப்புகள். அதிலும் கைலாசாவின் பொருளாதார அறிக்கைகளை எல்லாம் 8 சன்னியாசிகள் கொண்ட குழுவை வைத்து கடந்த 2 வருடங்களாக பக்கா பிளானோடு தயாரித்து இருக்கிறார் நித்தியானந்தா....

கைலாசா நாட்டின் ரிசர்வ் பேங்க், கரன்சி, பாஸ்போர்ட் என எல்லாமே தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் அசத்தி வருகிறது.....

Post a Comment

0 Comments