கெளம்பிட்டான்யா.. கெளம்பிட்டான்யா... வடிவேலு நடிக்கும் புதிய வெப் சீரிசை இயக்க போவது யார் தெரியுமா?

Post a Comment
vadivelu web series
"வைகை புயல்" என்று அழைக்கப்படும் வடிவேலு, திரையில் தோன்றினாலே சிரிப்பதற்கு என்று ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவர் அரசியல் பிரச்னைகளால் சில ஆண்டுகள் திரைப்படம் நடிக்காமலேயே இருந்தார். பிரமாண்ட திரைப்பட தயாரிப்பு டைரக்டர் சங்கர் அவர்களுக்கும், வடிவேலுவுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக திரைப்படங்களில் நடிப்பதற்கு, தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது. ஆனால் உண்மையில் அது மட்டுமே காரணமாக இல்லை. திமுகவுக்கு ஆதரவாக ஓட்டு பிரசாரத்தில் ஈடுபட்டதிலிருந்து வடிவேலு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஓரங்கப்பட்டார்.

இந்நிலையில் "காதல் மன்னன்" கமலஹாசன் நடிக்கும் "தலைவன் இருக்கிறான்" என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. அதுவும் கொரோனோ பிரச்னையால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வைகை புயலை திரையில் பார்க்கலாம் என்ற நினைத்திருந்த ரசிகர்களுக்கு இது பேரிடியாக அமைந்தது.

இதனையடுத்து தலைநகரம், மருதமலை, படிக்காதவன் திரைப்படங்களை இயக்கிய சுராஜ் டைரக்சனில் புதிய படமொன்றில் வடிவேலு ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு, தொடங்குவதாக இருந்த இத்திரைப்படத்தை வெப் சீரியசாக எடுக்க வடிவேலு கேட்டுக்கொண்டுள்ளார். அவரின் வேண்டுகோளை ஏற்று இயக்குனர் சுராஜ் கதை அமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, ஒன்பது தொடராக வெளியாகும் வகையில் "வெப் சீரிஸ்" ஆக எடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வெப் தொடர் காமெடி கலந்த பேய் கதையாக உருவாகி உள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter