சத்து நிறைந்த இலங்கை ரொட்டி செய்வது எப்படி?

Post a Comment
sri-lankan-pol-rotiகோதுமை மாவுடன், தேங்காய் துருவல் சேர்த்து செய்யும் இந்த ரொட்டி இலங்கையில் மிகவும் பிரபலம். சத்தானதும் கூட. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

மைதா மாவு - அரை கப்
கோதுமை மாவு - அரை கப்
பச்சை மிளகாய் - ஒன்று
தேங்காய்த் துருவல் - அரை கப்
தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை:

பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தேங்காய்த் துருவல், மைதா மாவு, கோதுமை மாவு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.

மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கனமாக தட்டி வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் திரட்டி வைத்த ரொட்டியை போடவும்.  

இரு பக்கமும் எண்ணெய் ஊற்றி சுட்டெடுத்து சைட் டிஷ் உடன் பரிமாறவும்.

சூப்பரான இலங்கை ரொட்டி ரெடி.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter