தமிழக அரசில் பணி ! மருத்துவத் துறையில் மகத்தான பணி ! government jobs


தமிழகத்தில் தற்காலிகமாக 99 பணியிடங்களை நிரப்புவதற்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம்: ஸ்கில்டு அசிஸ்டென்ட் கிரேடு II பிரிவில் 87, பிசிசியன் அசிஸ்டென்ட் பிரிவில் 12 என மொத்தம் 99 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : ஸ்கில்டு அசிஸ்டென்ட் பிரிவுக்கு பத்தாம் வகுப்புடன் மெக்கானிக் மோட்டர் வெகிக்கிள் பிரிவில் என்.டி.சி., சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பிசிசியன் அசிஸ்டென்ட் பதவிக்கு பி.எஸ்சி., (அலைடு ஹெல்த் சயின்ஸ்) அல்லது பி.எஸ்., (பிசிசியன் அசிஸ்டென்ட்) முடித்திருக்க வேண்டும்.

வயது : இரு பிரிவுகளுக்கும் 1.7.2020 அடிப்படையில் 18 - 58 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : கல்வித்தகுதி மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். ஸ்கில்டு அசிஸ்டென்ட் பிரிவுக்கு பத்தாம் வகுப்புக்கு 40%, என்.டி.சி., சான்றிதழுக்கு 60% சதவீதம் கணக்கிடப்படும். பிசிசியன் அசிஸ்டென்ட் பிரிவுக்கு பட்டப்படிப்பு 50%, பிளஸ் 2வில் 30%, பத்தாம் வகுப்புக்கு 20% மதிப்பெண் வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம் : ஸ்கில்டு அசிஸ்டென்ட் பதவிக்கு ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் ரூ. 250. பிசிசியன் அசிஸ்டென்ட் பதவிக்கு ரூ. 600. எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300.

கடைசிநாள் : 16.8.2020.

விபரங்களுக்கு : www.mrb.tn.gov.in/notifications.html

Post a Comment

0 Comments