நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் இருந்து சென்னைக்கு திரும்பியுள்ள தகவல் தெரிய வந்துள்ளது.
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சென்னை திரும்பினார்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடித்த துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றன. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, ஆர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனடாவில் படித்து வரும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்தியா வர முடியாமல் போனது. இதனால் மகனை பார்க்காத வருத்தத்தில் இருந்த நடிகர் விஜய்யின் குடும்பத்தினர் இப்போது செம ஹாப்பியாம்.
சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து சென்னை திரும்பிய சஞ்சய், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு தற்போது வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் இப்போது மகனை கண்ட மகிழ்ச்சியில் இருக்கிறாராம் விஜய்.
Post a Comment
Post a Comment