கொரோனோவை குணப்படுத்தும் மூலிகை தேநீர் !



கொரோனோவை குணப்படுத்திடும் மூலிகை தேநீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அனுமதியுடன் சித்த மருத்துவர் வீரபாபு, கபசுர குடிநீருக்கு துணை மருந்தாக இதைப் பயன்படுத்தி, கொரோனோ நோயாளிகளை குணப்படுத்தி வருகிறார். இந்த துணை மருந்தான "மூலிகை" தேநீரை வீட்டிலேயே தயாரித்து பருகலாம்.


கொரோனோவை குணப்படுத்த உதவிடும் மூலிகை தேநீர் தயாரிப்பது எப்படி.?


தேவையான பொருட்கள்: 



  • சுக்கு, 100 கிராம், 
  • அதிமதுரம், 100 கிராம், 
  • சித்தரத்தை, 30 கிராம் 
  • கடுக்காய்த்தோல், 30 கிராம் 
  • மஞ்சள், 10 கிராம், 
  • திப்பிலி, ஐந்து கிராம், 
  • ஓமம் ஐந்து கிராம், 
  • கிராம்பு ஐந்து கிராம், 
  • மிளகு ஐந்து கிராம் 



  1. இவற்றை இடித்துப் பொடி செய்து, வைத்து கொள்ள வேண்டும். 
  2. 400 மில்லி நீரில் இந்த பொடியை, 10 கிராம் அளவு போட்டு, நன்கு கொதிக்க விடவும்.
  3. இந்த கசாய நீர், 100 மி.லி., அளவாக வற்றியதும், ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து இறக்கி, இளம் சூடாக வடிகட்டி, காலை மற்றும் இரவு உணவுக்கு பின் குடிக்கலாம்.


இந்த மூலிகை தேநீரை, நோய் பாதிப்பு உள்ளவர்கள் ஒரு வேளைக்கு, 100 மில்லியும், சிறுவர்கள், 50 மில்லியும் குடிக்கலாம். கொரோனா இல்லாதவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இதை தினமும் ஒருவேளை வீதம் காலையில் குடிக்கலாம்.

Post a Comment

0 Comments