இதய நோய் அபாயத்தை குறைக்கும் வாழைப்பழ தேநீர்?

Post a Comment
banana tea


வாழைப்பழ தேநீரில் உள்ள கேடசின் எனப்படும் ஆன்டிஆக்சிடெண்ட் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்பது பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதனை தேநீராக தயாரித்தும் பருகலாம். வாழைப்பழ தேநீரில் பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் மற்றும் வைட்டமின் பி 6 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

அதனை பருகுவது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். ரத்த அழுத்தத்தை குறைக்கவும் செய்யும். வாழைப்பழ தேநீர் பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைப்பதும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வாழைப்பழ தேநீரில் உள்ள கேடசின் எனப்படும் ஆன்டிஆக்சிடெண்ட் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்பது பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

வாழைப்பழ தேநீரில் சர்க்கரை குறைவு. அதனால் நீரிழிவு நோயாளிகளும் குறைந்த அளவில் சாப்பிடலாம். வாழைப்பழத்தை நீரில் கொதிக்கவைக்கும்போது சர்க்கரையின் வீரியம் குறைந்துவிடும்.

 வாழைப்பழத்தில் இருக்கும் மெக்னீசியமும், பொட்டாசியமும் தூக்கத்தை மேம்படுத்த உதவும். மேலும் வாழைப்பழத்தில் எல்-டிரிப்டோபான் என்னும் அமினோ அமிலமும் உள்ளது.
 இது தூக்கத்தை தூண்டும் ஹார்மோன்களான செரோடோனின் மற்றும் மெலடோனின் ஆகியவற்றை உருவாக்கும். அதுபோல் டொபமைன் எனும் அமினோ அமிலமும் வாழைப்பழத்தில் இருக்கிறது.
இது செரோடோனின் ஹார்மோனை உற்பத்தி செய்யும். இந்த அமினோ அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். மனச்சோர்வு மற்றும் கவலையை குறைக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

 வாழைப்பழ தேநீர் தவறாமல் குடித்துவருவதன் மூலம் மனநிலையை மேம்படுத்தலாம். வாழைப்பழத்தில் குறைந்த கலோரிகளே இருப்பதால் உடல் எடை குறைவதற்கும் உதவும். பசியையும் கட்டுப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும்.

வாழைப்பழ தேநீரில் உள்ளடங்கி இருக்கும் பொட்டாசியமானது ரத்த அழுத்தம் மற்றும் தசை சுருக்கங்களை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

 வாழைப்பழத்தின் தோலில் ஆண்டிமைக்ரோபியல், ஆக்ஸிஜனேற்ற பண்புகள், பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற பயோ ஆக்டிவ் சேர்மங்கள் உள்ளன.

 அவை சருமம் தொடர்பான பொதுவான பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

வாழைப்பழ தேநீர் தயார் செய்வது எளிதானது. அகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும். கொதிக்கத் தொடங்கியதும் வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி போடவும். 

பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து 10 நிமிடங்கள் வாழைப்பழத்தை வேகவிடவும். பின்னர் சிறிதளவு லவங்கப்பட்டை, டீ தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். பின்பு வடிகட்டி ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகலாம். 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter