முகச்சுருக்கம் வருவதை தடுத்து இளமையாக வைத்திருக்கும் மசாஜ்?

body massage


மசாஜ் செய்வதன் மூலம் தங்களுடைய அழகை பாதுகாத்துக் கொள்ளவும், மனதை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும். மசாஜ் செய்வது முகச்சுருக்கத்தை தடுத்து இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.

“இன்றைய சூழலில் பெரும்பாலான  மக்கள் மசாஜ் செய்வதை மறந்து விட்டார்கள். ஆனால் மசாஜ் செய்வதன் மூலம் தங்களுடைய அகம் புறம் இரண்டையும் பாதுகாப்பாகவும்,  அழகாகவும் வைத்துக்கொள்ள முடியும்.

மசாஜ் செய்வது முகச்சுருக்கத்தை தடுத்து இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.பொதுவாக க்ரீம், ஜெல், ஆயில், பவுடர் போன்றவை  மசாஜ் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. 

ஒவ்வொரு சருமத்தின் தன்மை பொருத்து எதை பயன்படுத்த வேண்டும் என்பதை உறுதி செய்ய  வேண்டும். உடலுக்கு பவுடர் பயன்படுத்தலாம்.வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆயில் பயன்படுத்த வேண்டும்.

 ஆயில் ஸ்கின் உள்ளவர்கள்  க்ரீம் பயன்படுத்த வேண்டும்.30 வயதுக்கு மேற்பட்டவர்கள் 15 லிருந்து 20 நிமிடங்கள்வரை மசாஜ் செய்ய வேண்டும். 

18  வயதுக்குட்பட்டவர்களுக்கு நாங்கள் மசாஜ் செய்ய சொல்வதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு முகம் இயற்கையாகவே சரும செல்கள்  புத்துயிர் பெற்று மேம்படும்.

 ஆகையால் 18 வயதுக்குட்பட்டவர்கள் மசாஜ்  செய்வதை  தவிர்த்துக்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments