வரகு - கொள்ளு பொங்கல் செய்வது எப்படி?

                                                     




varagu kollu ponkal



சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அந்த வகையில் வரகு, கொள்ளு வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வரகு அரிசி -1 கப்
கொள்ளு - கால் கப்
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
நெய் - 3 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கொள்ளுப் பயறை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

வரகரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும்.

குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதனுடன் கொள்ளு, வரகு சேர்த்து குக்கரை மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும்.

குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

சத்தான வரகு - கொள்ளு பொங்கல் ரெடி.

குறிப்பு: சாதாரண அரிசியைவிட சிறுதானி யங்கள் இறுகும் தன்மையுடையதால் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவும்.


Post a Comment

0 Comments