சாப்பாட்டுக்கே கஷ்டம் ! நடிகர் பொன்னம்பலத்தின் பரிதாப நிலை !

Post a Comment
எப்பபேர் பட்ட ஸ்டாராக இருந்தாலும், ஒரு காலத்திற்கு மேல் வறுமை எட்டிப் பார்த்துவிடும். சினிமா தொழில் பொறுத்தவரை, சினிமாவை மட்டுமே நம்பியிருந்தால், கடைசி காலத்தில் மோசம் போக வேண்டியதுதான். அப்படிதான் பல நடிகர் நடிகைகள் கடைசி காலத்தில் இருந்த இடம் தெரியாமல் சாதாரண வாழ்க்கை கூட வழியில்லாமல் தங்களை மாய்த்துக்கொள்கிறார்கள். அல்லது இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விடுகிறார்கள். அந்தளவிற்கு மாய போதை கொண்டது சினிமா. 

வாய்ப்புகள் இருக்கும்போது கொழிக்கும் பணம், வாய்ப்பு இல்லாத போது கிடைக்காது. ஆனால் அதே ஆடம்பரம், படாடோபம் போன்றவற்றை மட்டும் விட முடியாது. இதனால் கடன் வாங்கி தங்கள் இமேஜை காப்பாற்றுகின்றனர். அந்த நிலைக்கும் கீழ் இறங்கினால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் நடுத்தெருவுக்கு வந்துவிடுகின்றனர். வாடகை வீட்டில் குடியேறுகின்றனர். இறுதியில் நடுத்தெருவுக்கு வந்து விடுகின்றனர். 

நாட்டாமை படத்தல் பயங்கர வில்லனாக நடித்த பொன்னம்பலமும் அதற்கு விதி விலக்கு அல்ல. சிறுநீரக பிரச்னையால் அவதியுற்று சிகிச்சைப்பெற்ற பொன்னம்பலம் தற்பொழுது சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். இதே நிலைமை நீடித்தால் அவர் நடுத்தெருவுகுக வரக்கூடிய அவலம் நீடிப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

சினிமா வாய்ப்புகள் இல்லாத்தால், டிவி சீரியல், அப்படி இப்படி என காலத்தை கழித்துக்கொண்டிருந்த அவருக்கு கொரோனோ காலம் மிக கடுமையானதாக மாறியிருக்கிறது. சமீபத்தில்தான் அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை தரப்பட்டது. சிகிச்சைக்கு பணம் இல்லாத தால், சக நடிகர்கள் அவருக்கு பண உதவி செய்தனர். அதன் பிறகு வீடு திரும்பிய அவருக்கு போதுமான வருமானமோ, பணமோ இல்லாத தால் ஏழ்மையை இருந்து வருகிறார். 

அவரது சிகிச்சைக்கு திரு கமல்ஹாசன் உதவி செய்தார். மேலும் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துவந்தார் கமல் .இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு விசாரித்துவந்தார் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்.

கமலை தொடர்ந்து பொன்னம்பலத்திற்கு உதவிய ரஜினி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ஏற்றோகொண்டதாவும் தகவல் வெளியானது. இப்படி ஒரு நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள பொன்னம்பலம். 

பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது பேசியதாவது, எனக்கு பல ஆண்டுகளாக உடல்நிலை சரியாமல் தான் இருந்தது சினிமாவில் நான் சம்பாதித்து போது அதை நான் சேர்த்து வைக்கவில்லை. தற்போதும் ஒரு வாடகை வீட்டில்தான் இருந்து வருகிறோம் என்றார். யாராக இருந்தாலும், சம்பாதித்த பணத்தை சேமித்து வைக்கவில்லை என்றால், பிறகு வாழ்க்கை என்பது கடினம்தான்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter