'ஓ மை கடவுளே' தெலுங்கு ரீமேக்கில் இவர்தான் ஹீரோ.. அங்கும் கடவுள் ஆகிறாரா நடிகர் விஜய் சேதுபதி?

Post a Comment

தமிழில் ஹிட்டான, ஓ மை கடவுளே படத்தில் தெலுங்கில் நடிக்கும் ஹீரோ யார் என்பது தெரியவந்துள்ளது.

அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவான படம், ஓ மை கடவுளே. வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ஷாரா உட்பட பலர் நடித்துள்ளனர்.



அஷ்வத் மாரிமுத்து இயக்கிய இந்தபடத்தை அக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லிபாபு, ஹேப்பி ஹை பிக்ச்சர்ஸ் அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

இந்தியில் ரீமேக் ஆகிறது...தெலுங்கில் மெகா ஹிட்டான அல்லு அர்ஜுன் படம்.. இவர்தான் ஹீரோ!

ரொமான்டிக் காமெடி

இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கடவுளாக நடித்திருந்தார். அவர் உதவியாளராக ரமேஷ் திலக் நடித்துள்ளார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்தார். இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளார் வாணி போஜன். இந்த ரொமான்டிக் காமெடி படம், இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் கமர்சியலாகவும் வெற்றி பெற்ற இந்தப் படத்தை பிரபலங்களும் பாராட்டினர்.

தெலுங்கு ரீமேக்

இதுபற்றி இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவிடம் கேட்டபோது, 'இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று எனக்குத் தெரியும். இதன் ஸ்கிரிப்டை 5 வருடமாகச் செதுக்கி செதுக்கி உருவாக்கினேன். படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படியொரு மெகா ஹிட்டை பெறும் என்று நினைக்கவில்லை' என்று தனது பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.



விஸ்வக் சென் ஹீரோ

இதில் ஹீரோவாக நடிப்பது யார் என்பது இப்போது தெரியவந்துள்ளது. விஸ்வக் சென் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். தருண் பாஸ்கர் வசனம் எழுதுகிறார். தமிழில் இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறாரா, வேறு யாரும் இயக்குகிறார்களா என்பது பற்றி தெரியவில்லை. ஆனால், முன்பு அளித்த பேட்டியில் தானே இயக்க இருப்பதாக அஸ்வத் மாரிமுத்து கூறியிருந்தார்.



மகேஷ்பாபு பாராட்டு

மற்ற நடிகர், நடிகைகள் முடிவாகவில்லை. நடிகர் விஜய் சேதுபதியை தெலுங்கிலும் கடவுளாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்தப் படத்தை பிரபல தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு பாராட்டி இருந்தார். ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன் என்றும் புத்திசாலித்தமாக எழுதப்பட்ட கதை, சிறப்பான இயக்கம் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter