முதல் பந்திலேயே சிக்ஸர்.. வனிதா புருசனை நோண்டி நொங்கு எடுக்கும் கஸ்தூரி.. மாஸ் காட்டும் முதல் புரோமோ வீடியோ!

Post a Comment
ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக இருந்த பிரபல நடிகைகள் பின்னர் அரசியலில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். ஆனால் எந்த ஒரு கட்சியிலும் சேராமல் எப்போதுமே மக்களுக்கு தேவையான போது அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார் கஸ்தூரி.

அன்னை தெரசாவாக மட்டுமில்லாமல் அதிரடி விஜயசாந்தி ஆகவும் அவ்வப்போது அவரை ட்விட்டரில் பார்க்க முடியும். தேவையில்லாமல் தன்னைச் சீண்டுபவர்களை வச்சி செய்வது இவருக்கு பொழுதுபோக்கு.

அந்த வகையில் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக போய்க் கொண்டிருப்பது வனிதாவின் மூன்றாவது திருமணம் தான். வனிதாவை திருமணம் செய்துகொண்ட பீட்டர் பால் அவருடைய முன்னாள் மனைவி முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை அவசரஅவசரமாக திருமணம் செய்து கொண்டார்.
இதற்காக நியாயம் கிடைக்க போராடி பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் பல பேட்டி கொடுத்து வருகிறார். அந்தவகையில் நடிகை கஸ்தூரியிடமும் தனக்கு ஆதரவு தருமாறு கோரிக்கை வைத்துள்ளதை தொடர்ந்து சமீபத்தில் அவருடன் நேர்காணல் நடத்தினார்.

அதில் பல்வேறு வகையான விஷயங்கள் வெளிவந்தன. ஆனால் வனிதா கஸ்தூரியை நேரடியாக டுவிட்டரில் வம்பிழுத்தார். சும்மா விடுவாரா கஸ்தூரி. ஓட்டிய ஓட்டில் அவரை பிளாக் செய்து விட்டு ஓடினார் வனிதா. சும்மா இருந்த சிங்கத்தை சொறிந்து விட்ட கதையாக கஸ்தூரியை சீண்டினார் வனிதா.

உடனடியாக கனெக்ட் வித் கஸ்தூரி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஆரம்பித்து முதல் வீடியோவே வனிதாவின் முன்னாள் கணவர் செய்த பித்தலாட்டங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் Promo1 வெளியிட்டுள்ளார். அதில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் என்று கூறியதில் அனைவருக்கும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சஸ்பென்ஸ் தாங்க முடியல ஜி, சீக்கிரம் தெறிக்க விடுங்க.!


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter