எதிர்ப்பு சக்தியை கூட்டும் கிரீன் வைட்டமின் ஜூஸ் செய்வது எப்படி?

Post a Comment
 Green vitamin juice


இதில் ஜூஸில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் ஏ, சி,இ நிறைந்துள்ளது. இது சரும அழகுக்கும் தேவையானது. இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ஆரஞ்சு பழம் . 3
நறுக்கிய கீரை - 1 கப்
முட்டை கோஸ் -   100 கிராம்
வெள்ளரிக்காய் - 1
ஆப்பிள் - 1


செய்முறை

முட்டை கோஸ், வெள்ளரிக்காய், ஆப்பிளை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஆரஞ்சு பழங்களை தோல் நீக்கி பிழிந்து ஜூஸாக்கி கொள்ளவும்.

மிக்சியில் ஆரஞ்சு ஜூஸை ஊற்றி அதில் கீரை, முட்டைக்கோஸை போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் அதனுடன் ஆப்பிள், வெள்ளரிக்காயை கொட்டி மீண்டும் அரைக்கவும்.

ஜூஸ் பதத்துக்கு வந்ததும் டம்ளரில் ஊற்றி ருசிக்கலாம்.

இதில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் ஏ, சி,இ நிறைந்துள்ளது. இது சரும அழகுக்கும் தேவையானது.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter