லெட்டூஸ் டிரை ஃப்ரூட்ஸ் சாலட் செய்வது எப்படி?

veg dry friuts salat


டிரை ஃப்ரூட்ஸ், லெட்டூஸ் இவை இரண்டிலும் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இவை இரண்டையும் வைத்து சுவையான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

லெட்டூஸ் இலைகள் - 4
உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்,
பாதாம், பிஸ்தா துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன்,
தேன் - சிறிதளவு,
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சைப் பழம் - ஒன்று,
இளம் ஸ்வீட் கார்ன் முத்துகள் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


செய்முறை:

லெட்டூஸ் இலைகளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

எலுமிச்சைப் பழத்தைச் சாறு பிழிந்து வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் லெட்டூஸ் இலைகளுடன் பாதாம், பிஸ்தா, தேன், மிளகுத்தூள், உலர் திராட்சை, ஸ்வீட் கார்ன் முத்துகள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

கடைசியாக மேலே எலுமிச்சைச் சாறு பிழிந்து கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

சூப்பரான லெட்டூஸ் டிரை ஃப்ரூட்ஸ் சாலட் ரெடி.

Post a Comment

0 Comments