டேனியை பார்த்தவுடன் கட்டிபிடித்துக்கொண்டேன் - நடிகை வரலக்ஷ்மி

Post a Comment

தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகர் வரலக்ஷ்மி. போல்டான நடிகையாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது வரவும் வரலட்சுமிக்கு மக்கள் செல்வி என்ற பட்டபெயரும் கொடுக்கப்பட்டுள்ளது.

தார தப்பட்டை, சண்டக்கோழி, நீயா 2 , சர்க்கார் போன்ற படங்களில் நடித்து தனது கதாபாத்திரத்தை மக்களின் அவ்வளவு அற்புதமாக வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். தற்போது இவர் "டேனி" படத்தில் ஒரு கொலையைத் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சந்தான மூர்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தை பிஜி மீடியா வொர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிக்கிறார்.



க்ரைம் திரில்லராக உருவாகி வரும் இப்படத்தில் வரலட்சுமியுடன் சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடாத்து குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட வரலக்ஷ்மி, ‘டேனி என்கிற நாய் தான் படத்தின் ஹீரோ. இதில் நான் இன்ஸ்பெக்டராக நான் நடித்துள்ளேன். இந்த படத்தில் நாய்க்குட்டியுடன் நடித்தது எனக்கு மிகவும் பிடித்தது. படப்பிடிப்பு தளத்தில் நாயைப் பார்த்தவுடன் முதலில் போய் கட்டிப்பிடித்துவிட்டேன்.


நான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு போனாலே டேனி எப்போது வருகிறது என்று தான் கேட்டுக் கொண்டே இருப்பேன். அது தன்னுடைய காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக போய் அதன் இருக்கையில் அமர்ந்து கொள்ளும்.கேமரா, படப்பிடிப்பு இதெல்லாம் டேனிக்கு பிரியவில்லை என்றாலும் நிறைய டேக் வாங்காமல் ட்ரெய்னர் என்ன சொல்றாரோ அதை சரியாக செய்துக் கொடுத்துவிடும்’ என்றார். அவர் பேசியதை கேட்டால் டேனியையும் , வரலட்சுமியையும் திரையில் காண ஆர்வம் தூண்டுகிறது.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter