ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கும் வனிதா விஜயகுமார் ! மன்னிப்பார்களா ரசிகர்கள் ?

Post a Comment

ஆடுன காலும், பாடும் வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அதுபோல தான் வனிதாவும் சர்ச்சைக்கு பெயர் போனவர். ஏதாவது ஒன்றை அவசரப்பட்டு பேசி விட்டு பிறகு வம்பில் மாட்டிக்கொண்டு , அனைவரது அர்ச்சனைகளையும் வாங்கி கட்டிக்கொள்வார். எது வந்தாலும் சமாளித்து விடும் வாய் திறமை அவருடன் ஒட்டிக்கொண்டுள்ளது என்று அவரது நெருங்கிய வட்டாரங்களே தெரிவிக்கின்றனர். அந்த வகையில் அவரது 3 வது திருமணம் குறித்த சர்ச்சை கருத்துகள், அவரது எதிர் பதிலால் சிலர் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள். 

அவர் ஒரு ட்வீட்டர் போஸ்டில் தஞ்சாவூரிலேயே வீட்டிற்கு வீடு 2 பொண்டாட்டிகாரன்கள் தான் அதிகம் என்ற போஸ்ட் சர்ச்சை ஏற்படுத்தியது. அதன் பிறகு அதற்கு வந்த எதிர்ப்பை பார்த்து ட்வீட்டர் கணக்கை டீ ஆக்டிவேட் செய்தார். மீண்டும் நேற்று ட்வீட்டர் கணக்கைத் திறந்த வனிதா, அதில் நான் பேசியது தவறாக இருந்தால்,
 

தம்பி தங்கைகளே என்னை மன்னித்து விடுங்கள். தஞ்சாவூர் எனது சொந்த ஊர் என்பதால், அந்த ஊரின் கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் அறிந்தவள். தஞ்சாவூர் தம்பி தங்கைகள் என்னை மன்னியுங்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தஞ்சாவூர் கார ர்கள் வனிதாவை மதிப்பார்களா? மன்னிப்பார்களா என்று தெரியவில்லை. 
அவருடைய ட்வீட் அப்படியே உங்களுக்காக.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter