உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் ‘கோகோ’?

Cocaine


இயற்கையான கோகோ தூள் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இயற்கையான கோகோ தூள் எந்த வகையில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்பது குறித்து பார்ப்போம்.

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் சாக்லேட்டை ருசிப்பதற்கு விரும்புவார்கள்.

 அதில் இருக்கும் கோகோவை அதிகமாக உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இயற்கையான கோகோ தூள் ஆரோக்கியமானதுதான். 

அதுதான் சாக்லேட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது என்றாலும் அதனுடன் சர்க்கரை அதிகமாக கலக்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது.

 அத்தகைய கோகோவில் கலோரிகளின் அளவும் அதிகமாகிவிடும். அதனால் ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது.

 பதப்படுத்தப்பட்ட கோகோவை தவிர்த்துவிட்டு இயற்கையான கோகோ தூளை உபயோகிக்கலாம். அது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

 இயற்கையான கோகோ தூள் எந்த வகையில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்பது குறித்து பார்ப்போம்.

* ஒரு டேபிள்ஸ்பூன் கோகோ தூளில் 10 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன. கொழுப்பு ஒரு கிராமும், கார்போஹைட்ரேட் 3 கிராமும், புரதம் ஒரு கிராமும், நார்ச்சத்து 2 கிராமும் கலந்திருக்கின்றன. 

எந்தவொரு உணவுப்பொருளாக இருந்தாலும் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருந்தால் அது ஆரோக்கியமானதாக மதிப்பிடப்படுகிறது.

 கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் நார்ச்சத்தை பெற விரும்புபவர்கள் கோகோ தூளை தேர்ந்தெடுக்கலாம்.

Post a Comment

0 Comments