இந்த பேஸ் பேக் போடுங்க... உங்கள் சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை பாருங்க...!

Post a Comment
beauty skin


உங்கள் சரும ஆரோக்கியம் பாழாகாமல் சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்ட வேண்டுமா? அப்படியானால் இந்த பேஸ் பேக்குகளை போடலாம்.

உங்கள் சரும ஆரோக்கியம் பாழாகாமல் சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்ட வேண்டுமா? அப்படியானால் இந்த பேஸ் பேக்குகளை போடலாம்,

 இதன்  மூலம் சருமத்தின் நிறத்தை உடனடியாக அதிகரித்துக் காட்ட முடியும். அதோடு சருமமும் மென்மையாக பட்டுப் போன்று பொலிவோடு காட்சியளிக்கும்.

* அரிசி மாவில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் உட்பொருட்கள் சருமத்தை பிரகாசமாகவும், பொலிவோடும், மென்மையாக்கவும் செய்யும்.

 பால் சரும செல்களுக்கு ஊட்டமளிப்பதோடு, வறட்சியடையாமல் தடுக்க உதவும்.

அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
பால் -2-3 டேபிள் ஸ்பூன்

ஒரு பௌலில் அரிசி மாவு மற்றும் பால் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். 

பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சரும நிறத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

* உருளைக்கிழங்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. அதே சமயம் இதில் ப்ளீச்சிங் பண்புகளும் அடங்கியுள்ளது.

 எனவே இதைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பளிச்சென்று பொலிவோடு காணப்படும்.

உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, உருளைக்கிழங்கு சாற்றினை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

 பிறகு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வர ஒரே வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக இந்த செயலை செய்த பின், மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள். ஏனேனில் இச்செயலால் சருமம் வறட்சி அடைய வாய்ப்புள்ளது.

* ஓட்ஸில் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்க உதவும் உட்பொருட்கள் நிரம்பியுள்ளது.

 மேலும் இதில் உள்ள பண்புகள் சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரித்து, சருமத்தை பொலிவோடும் பிரகாசமாகவும் காட்டும்.

ஓட்ஸ் - 3 டேபிள் ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 2-3 டேபிள் ஸ்பூன்

ஓட்ஸை நன்றாக பொடித்து அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 

அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இறுதியில் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை செய்ய நல்ல பலனைக் காணலாம்.

* தயிர் சருமத்தில் உள்ள அனைத்து விதமான அழுக்குகளையும் நீக்கி, பொலிவான மற்றும் சுத்தமான சருமத்தைப் பெற உதவியாக இருக்கும்.

 தேன் சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுத்து, சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரிக்கும்.

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவுங்கள். பின்பு 20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவுங்கள். 

இந்த ஃபேஸ் பேக்கை தினமும் வேண்டுமானாலும் செய்யலாம். இதனால் சரும நிறம் வேகமாக மேம்பட்டு காணப்படும்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter