ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய்!!

Okra !!


வெண்டைக்காஉ மனித உடலுக்கு தேவையான பல நற்குணங்களை உள்ளடக்கியுள்ளது. அவை பின்வருமாறு...

வெண்டைக்காயில் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருள் உள்ளது. இதய துடிப்பை சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது.

வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகிறது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. 

இளம் வெண்டை பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு எரிச்சல் போன்றவையும் தணியும்.

வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியது.

வெண்டைக்காயில் உள்ள ஃபோலேட், எலும்புகளை  உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பைக் குறைக்கிறது. 

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கவும் வெண்டைக்காய் உதவுகிறது.

அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து. 

வெண்டைக்காயைக் கொதிக்க வைத்த தண்ணீரில் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கூந்தலை அலசினால் தலைமுடி பளபளப்பாகும்.

Post a Comment

0 Comments