என்னை தலித் ஆக்கியவர்களுக்கு நன்றி ! நடிகை ரித்விகா உணர்ச்சி பூர்வ பேட்டி !

Post a Comment
2013-ல் பரதேசி படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் ரித்விகா. 2018-ல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளர் ஆகி, கவனம் ஈர்த்தார். கடைசியாக இவர் நடிப்பில் வால்டர் படம் வெளியானது.

சமூகவலைத்தளத்தில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசிய ஒருவருக்குப் பதில் கொடுக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ரித்விகா.

nadigai rithvika"தலித்தாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன். என்ன செய்ய? அப்பாக்கியம் நானடையேன். நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிகு ஆதிக்க சாதிகளுள் பிறந்தவள் தான். வருந்துகிறேன். இனியாவது சாதிகளற்ற சமூகமாக, மனிதர்களாக வாழ முயற்சிப்போம். நிற்க.

actress rithvika

ஒரு வகையில் நானும் தலித் தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனின் பெண்ணாகிய நானும் தலித் தானே. காலங்காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர் தானே. ஆம் தலித். எம்மை தலித்தாக்கிய பிழையும் பாவமும் தங்கள் ஆணினத்தையே சாரும். மற்றபடி எம் அழகைப் பாராட்டியதற்கு நன்றி. பி.கு - தலித் பெண்கள் என்னை விட அழகு" என்று கூறியுள்ளார். 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter