ஒட்டகப் பாலில் உள்ள ஊட்டச்சத்துகள் என்னென்ன…? அறிந்து கொள்வோமா?

What are the nutrients in camel's milk?


ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மோனோ அன்சாட்டர்டு ஃபேட்டி ஆசிட்ஸும் இதில் உள்ளது.

இன்றைய காலங்களில் மக்கள் பலர் டெய்ரி-ஃப்ரி பாலை தேடுகிறார்கள். பாலில் உள்ள லாக்டோஸ் சிலருக்கு அலர்ஜியைக் கொடுக்கலாம்.

 அல்லது விலங்கினங்கள் ஹார்மோன் ஊசி போட்டு வளர்ப்பதால் அதனால் பாலிலும் அதன் பாதிப்பு இருக்கும் எனப் பயந்து பலரும்  விலங்கினங்கள் வழி கிடைக்கும் பாலை விரும்புவது இல்லை.

 இதற்கு மாற்றாக பல வகையான பால் மார்க்கெட்டில் உள்ளது. தேங்காய் பால்,சோயா பால், பாதாம் பால், அரிசி பால்,ஓட்ஸ் பால் எனப் பல வகைகள் இருக்கின்றன. 

மேலே சொன்ன பால்களை பசும் பாலின் ஊட்டச்சத்துடன் ஒப்பிட முடியாது என்றாலும் இது எளிதாக ஜூரணமாகக் கூடிய ஒன்று. பால் தரும் விலங்கினங்களில் ஒட்டகமும் ஒன்று.

 ஒட்டகப் பாலில் சாட்டர்டு ஃபேட்டி ஆசிட்ஸ் குறைவாக உள்ளது.  கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவு பசும் பாலில் உள்ளது போலவே இருக்கிறது.

இதில், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மோனோ அன்சாட்டர்டு ஃபேட்டி  ஆசிட்ஸும் இதில் உள்ளது. 

இதில் அதிகப்படியான அளவில் மக்னீசியம், சின்க் மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின்கள் சி, பி2 ஏ மற்றும் ஈ ஆகியவை  உள்ளது. ஒட்டகப் பால் தாய்ப்பாலுக்கு இணையானது. 

Post a Comment

0 Comments