கடுமையான வேலைக்களுக்கு மத்தியில் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா..? எளிதான உடற்பயிற்சிகளை தவிர்க்காமல் செய்வது நல்லது.
ஆராய்ச்சியாளர்கள், வேலைநேரத்திற்கு இடையில் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினாலே போதும் அந்த உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர்.
இது குறித்த ஆராய்ச்சி ஒன்று உடற்பயிற்சியை எங்கும் எப்போது செய்தாலும் அது உடல் நலனை மேம்படுத்தவே செய்யும் என்பதை கண்டுபிடித்துள்ளது.
“வேலையையும் உடற்பயிற்சியையும் ஒன்றிணைத்து செய்வது உடற்பயிற்சி செய்வதை எளிமையாக்குகிறது”என்று கனடாவிலுள்ள மாக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்டின் கிபாலா தெரிவித்துள்ளார்.
அன்றாடம் வேலைகளுக்கு நடுவே உங்களின் அலுவலகத்திலோ அல்லது வீட்டின் மாடிப்படிகளிலே தீவிர நடை பயிற்சி செய்வது அது உடல் நலனைக் கொடுத்து வேலையில் இருக்கும் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
Post a Comment
Post a Comment