நிக்கி கல்ராணி இந்த முன்னணி நடிகரை காதலிக்கிறாரா?

Post a Comment

நடிகை நிக்கி கல்ராணி பற்றி ஒரு தகவல் பரபரப்பாக தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த டார்லிங் படத்தின் மூலமாக ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. அந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நிக்கி கல்ராணிக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழ் கிடைத்தது.அதற்கு பிறகு அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2, ஹர ஹர மஹாதேவகி என அவர் தொடர்ந்து படங்கள் நடிப்பதால் தமிழ் சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராக கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறார்.மேலும் மரகத நாணயம் என்ற படத்தில் அவர் ஆதி உடன் நடித்து இருந்தார். இந்த படம் ஹிட் ஆனது. இந்நிலையில் தற்போது நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இடையே காதல் இருப்பதாக கிசுகிசு தற்போது தென்னிந்திய சினிமாத் துறையில் உலா வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதியின் அப்பா இயக்குனர் ரவி ராஜா அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. அந்த விழாவில் நடிகை நிக்கி கல்ரானி கலந்து கொண்டுள்ளார்.


அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில் தான், நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இருவரும் டேட்டிங் செய்து வருகின்றனர் என தகவல் பரவி வருகிறது.கடந்த இரு தினங்களாக தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பரபரப்பான செய்தி இது தான். ஆனால் அவர்கள் இருவரும் இது தொடர்பான எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter