திருமணம் ஆகாமலேயே அட்டகாசம் செய்யும் ஹர்திக் பாண்ட்யா.. ! சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகும் புகைப்படம் !

Post a Comment
ஹர்திக் பாண்ட்யா மடிமீது தலைவைத்து உறங்கும் நடிகை நடாசா ஸ்டான்கோவிச்... இணையத்தில் வைரளாகிய குடும்ப புகைப்படம்..!

தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுக்கும் நிலையில், உலகெங்கிலும் உள்ள விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும்  இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஜூலை 8 ஆம் தேதி முதல் சர்வதேச கிரிக்கெட்டும் மீண்டும் தொடங்கியது. இருப்பினும், சில விளையாட்டு வீரர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தங்களின் நேரத்தை களித்து வருக்கின்றனர். இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யாவின் புதிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. கடந்த ஜனவரியில் நடிகை நடாசா ஸ்டான்கோவிச்சை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்நிலையில், நடாசாவுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. இருவரும் சமூகவலைதளங்களில் தங்களது கியூட் படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று ஹர்திக் தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.


அந்த புகைப்படத்தில், இதில், மூன்று செல்ல நாய்கள் உள்ளது, ஹர்திக் மடியில் நடாசா தலை வைத்து படுத்துள்ளார். ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நாய் முத்தம் கொடுக்கிறது. இது எங்களது குடும்பம் என அந்த புகைப்படதுடன் அவர் இந்த வாசகத்தை குறிப்பிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் பிடித்தமான ஜோடி, அழகான குடும்பம் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாக பிரபலங்கள் இருவரும் சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். இது தொடர்பான ஹார்டிக்கின் இன்ஸ்டாகிராம் இடுகையில்: "நடாசாவும் நானும் ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டோம், அது இன்னும் சிறப்பாக வரவிருக்கிறது.

மிக விரைவில் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய உயிரை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய கட்டத்திற்கு நாங்கள் மகிழ்ச்சியோடு காத்திருக்கிறேன். உங்கள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் வேண்டுகிறோம்" என குறிப்பிட்டிருந்தார். 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter