நீயே ஒரு பிராடு! உன் கணவனை முதலில் உன்னோடு சேர சொல்.. நடிகை கஸ்தூரியுடன் மல்லுக்கு நின்ற வனிதா

Post a Comment

நடிகை கஸ்தூரியை சரமாரியாக திட்டி வனிதா சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் கணவர் பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன், அவர்களின் திருமணத்திற்கு எதிராக புகாரளித்தார். இதையடுத்து வனிதாவின் திருமணம் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆனது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி, எனக்கு வனிதா விஜயகுமார் விடயத்தை பற்றி பேசவே பிடிக்கவில்லை. அவர் பெயரை கூட சொல்ல எனக்கு பிடிக்கவில்லை என கூறியிருந்தார்.

இதையடுத்து கஸ்தூரியை விமர்சித்திருந்தார் வனிதா.

இந்த நிலையில் மீண்டும் வனிதாவும், கஸ்தூரியும் டுவிட்டரில் சரமாரியாக மோதி கொண்டனர்.

வனிதாவின் பதிவில், ஹெலனுக்கு நீ வாழ்க்கை கொடு கஸ்தூரி, அவளுக்கு மதுவுக்கு அடிமையான கணவன் எதற்கு தேவை? ஹெலனுக்கு நீயும் தமிழ்நாடும் உடன் இருக்கிறது என பதிவிட்டார்.

அதற்கு பதிலளித்த கஸ்தூரி, நான் மற்றவர்களின் வாழ்க்கை துணையை அவர்களிடம் இருந்து பறிக்கவில்லை, அதே போல டீன் ஏஜ் திருமண கனவுகளை நாற்பது வயதில் மறுபரிசீலனை செய்யவில்லை என வனிதாவை தாக்கினார்.

இதனால் கோபமடைந்த வனிதா, நீயே ஒரு பிராடு, உன் வாழ்க்கை பற்றி எனக்கு தெரியும், முதலில் உன் கணவனை உன்னுடன் சேர சொல் என கூறினார்.

இதற்கு பதில் தந்த கஸ்தூரி, உங்களை போல தரம் தாழ்ந்து நான் பேச மாட்டேன் வனிதா அக்கா, உங்கள் பாணியில் சண்டை போடுவருடன் நீங்கள் போய் பேசுங்கள், என் நேரத்தை வீணாக்காதீர்கள் என பதிவிட்டுள்ளார்.

இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் சண்டை போட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter