இருதய ஆரோக்கியம் மற்றும் உடல் எடை குறைக்க வால்நட் சாப்பிடலாம்!!

 Walnut


வால்நட் சாப்பிடுவதால் ஆண்களின் இனபெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

வால்நட்டில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியிருக்கிறது.  புரதம், தாதுக்கள், வைட்டமின் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்த ஒரே ட்ரை ஃப்ரூட் இதுதான்.  

இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.  உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து, மூளை செயல் திறனையும் அதிகரிக்க செய்கிறது.  வால்நட்டின் மேலும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.  

ஆண்டிஆக்ஸிடண்ட்: 



வால்நட்டில் ஆண்டிஆக்ஸிடண்ட், வைட்டமின் ஈ, மெலடோனின் மற்றும் பாலிஃபினால் நிறைந்திருக்கிறது.  இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.  இரத்த நாளங்களில் கொழுப்பு சேராமல் தடுக்கும்.  

ஒமேகா 3:

ஒமேகா 3 நிறைந்தது வால்நட்.  இதனால் இருதய நோய்களின் அபாயம் தடுக்கப்படுகிறது.  

வீக்கம்:

வால்நட்டில் பாலிஃபினால் இருப்பதால் உடலில் வீக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.  உடலில் பெரும்பாலும் வீக்கம் ஏற்படுவதற்கு டைப் 2 நீரிழிவு நோய்தான் காரணம்.  மேலும் இருதய நோய்கள், புற்றுநோய் மற்றும் அல்ஸீமர் வராமல் தடுக்கிறது.  

இரத்த அழுத்தம்:

 வால்நட்டில் இருக்கக்கூடிய ஆரோக்கிய கொழுப்புகள், மக்னீஷியம் மற்றும் நார்ச்சத்து இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.  உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் வால்நட்டை சாப்பிடலாம்.  

உடல் எடை:

இதில் கலோரிகள் அதிகம் என்பதால் உங்கள் பசியை போக்கி உடல் எடையை சீராக வைக்கிறது.  

புற்றுநோய்:

பாலிஃபினால் இருப்பதால் ப்ராஸ்ட்ரேட் மற்றும் கோலோரெக்டல் புற்றுநோயை தடுக்கிறது.  குடல் பகுதியில் இருக்கக்கூடிய சில நுண்ணிய உயிர்கள் பாலிஃபினாலை யூரோலிதினாக மாற்றுகிறது.

  இந்த யூரோலிதினில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை உள்ளது.  இவை புற்றுநோயை தடுக்கிறது.  

வயது முதிர்ச்சி:

வால்நட்டில் நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுக்கள் இருப்பதால் உடலில் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி வயது முதிர்ச்சியை தடுக்கிறது.  

கொலஸ்ட்ரால்:

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைக்ளிசரைடு ஆகியவற்றை குறைக்கிறது.  இதனால் இருதய நோய்களும் தடுக்கப்படுகிறது.  

இனப்பெருக்க மண்டலம்:

ஒமேகா 3 மற்றும் வைட்டமின் ஈ இருப்பதால் விந்து அணு ஆரோக்கியமாக இருக்கும்.  வால்நட் சாப்பிடுவதால் ஆண்களின் இனபெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.  



வால்நட்டை தினசரி உணவில் சேர்த்து கொள்ளலாம்.  சாலட்டில் தூவி சாப்பிடலாம்.  அரைத்து சாஸ் அல்லது டிப்பில் சேர்க்கலாம்.

  யோகர்ட் அல்லது ஓட்மீலுடன் சேர்த்து சாப்பிடலாம்.  வறுத்து அல்லது சிறு துண்டுகளாக நறுக்கி பாஸ்தா அல்லது காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.  

Post a Comment

0 Comments