
அனைத்துத் தரப்பு மக்களையும் பாகுபாடு இல்லாமல் பயமுறுத்தி வருகிறது கொரோனா. அந்த வகையில் ஒருசில படங்களே நடித்து இருந்தாலும் என்ன ஒரு என்ன ஒரு அழகியடா..என ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா. நடிகர் அர்ஜுனின் மகள். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தன் வீட்டிலேயே அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். இதற்கு முன்பு தன் உறவினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் அந்த வரிசையில் ஐஸ்வர்யாவிற்கும் கொரோனா பாஸிடிவ் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சமீபத்தில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பாதுகாப்பாக இருக்கவும். குணமானதும் தெரிவிக்கிறேன். லவ் யூ ஆல் என பதிவிட்டிருக்கிறார்.

சமீபத்தில் அர்ஜூனின் நெருங்கிய உறவினரான பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரழந்தார். அப்போது அர்ஜுன் கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் அர்ஜுனின் சகோதரர் மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா உறுதியான செய்தி வெளிவந்தது. இப்போது ஐஸ்வர்யாவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த குடும்பமே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
Post a Comment
Post a Comment