கட்டுக்கோப்பான உடலுக்கு புரோட்டீன் பவுடர் சாப்பிடலாமா?- வல்லுநர்கள் சொல்வதைக் கேளுங்க!!

Post a Comment
 Can I eat protein powder?



புரோட்டீன் பானங்கள் உட்கொள்ளலாமா என்பது பற்றி நிபுணர்களின் கருத்துக்களை இங்குப் பார்க்கலாம்.

ஆரோக்கியமான உணவின் முக்கியமானதாக புரதம் நிறைந்த உணவுகள் உள்ளன. நீங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்து, எடை தூக்கி கடுமையான பயிற்சி செய்கிறவராக இருந்தால், புரதம் நிறைந்த உணவுகள் அதிகம் தேவைப்படும்.

 அவை தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. 

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.  நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், புரோட்டீன் நிறைந்த உணவுகளை அன்றாடம் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

ஏனென்றால், உடலின் ஒட்டுமொத்த கலோரி அளவைக் குறைப்பதற்கு புரோட்டீன் உதவுகிறது.

சிக்ஸ் பேக் வைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்கள், வெயிட் தூக்கி உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் ஆகியோர் புரோட்டீன் பானங்கள், புரோட்டீன் பவுடர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

 ஆனால், இதுபோன்ற பவுடர்கள், ஊட்டச்சத்து பானங்களை எடுத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்பது பற்றி பலவிதமான கருத்துக்கள் வலம் வருகின்றன.

 அந்த வகையில், புரோட்டீன் பானங்கள் உட்கொள்ளலாமா என்பது பற்றி நிபுணர்களின் கருத்துக்களை இங்குப் பார்க்கலாம்.

பிரபல உடற்பயிற்சி ஆசிரியர் கயலா இட்சைன்ஸ் கூறுகையில், 'இயற்கையில் எல்லாவிதமான சத்துக்களும் உணவுகளில் கிடைக்கிறது. எனவே ஆரோக்கியமான சீரான உணவை உட்கொண்டாலே, நமக்குத் தேவையான புரோட்டீன் சத்துக்களைப் பெற முடியும். தனியாக புரோட்டீன் பவுடர்களைப் எடுக்கத் தேவையில்லை' என்கிறார்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter