உள்ளே சிவப்பு.. உடலுக்கு ஆபத்து..?

watermelon



தர்ப்பூசணியின் உள்புறம் சிவப்பு நிறத்தில் அழகாக காட்சியளிக்கும். அவை அடர்சிவப்பு நிறமாக தோற்றமளிப்பதற்காக ரசாயன பொடிகள் தூவப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன.

கோடை காலத்தின் ஆரோக்கியமான பழமாக தர்ப்பூசணி கருதப்படுகிறது. தர்ப்பூசணியில் 92 சதவீதம் நீரும், 6 சதவீதம் சர்க்கரையும், பிற ஊட்டச்சத்துக்களும் நிரம்பி இருக்கின்றன. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் நிறைய பேர் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

 தர்ப்பூசணியின் உள்புறம் சிவப்பு நிறத்தில் அழகாக காட்சியளிக்கும். அவை அடர்சிவப்பு நிறமாக தோற்றமளிப்பதற்காக ரசாயன பொடிகள் தூவப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன.

 அதைவிட மோசமான நிகழ்வாக தர்ப்பூசணி பழங்கள் வேகமாக வளர்வதற்காக ஆக்ஸிடோஸின் கலந்த ரசாயனம் உட்செலுத்தப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.

 அவ்வாறு உட்செலுத்தப்பட்ட தர்ப்பூசணிகளில் நைட்ரேட், குரோமேட், மெத்தனால் மஞ்சள், கார்பைடு, ஆக்ஸிடாஸின் போன்ற ரசாயனங்கள் கலந்திருக்கலாம்.

மேலும் தர்பூசணி விரைவாக வளர நைட்ரஜன் பல முறை பயன்படுத்தப்படுகிறது. அது உடலுக்குள் சென்றால் பாதிப்பு அதிகமாகும்.

தர்ப்பூசணியில் கலக்கப்படும் மெத்தனால் மஞ்சள், புற்றுநோய் உண்டாக்கும் அபாயம் கொண்டது. குரோமேட், உடலில் ரத்த இழப்பை ஏற்படுத்தக்கூடியது. மூளை செல்கள் சேதமடைவதற்கும், கண் பார்வை திறன் பாதிப்புக்குள்ளாவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

 ரசாயன சாயம் கலந்த தர்ப்பூசணியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சினைகள் மற்றும் வயிற்று வலி ஏற்படும்.
மாம்பழங்கள், வாழைப்பழங்களை போல தர்ப்பூசணியை வேகமாக பழுக்க வைப்பதற்கு கார்பைட் தூள் பயன்படுத்தும் நிகழ்வும் சில இடங்களில் நடக்கிறது. தர்ப்பூசணியை வெட்டுவதற்கு முன்பு நன்றாக நீரில் கழுவுவது அவசியமானது.

 தர்ப்பூசணி மிகவும் அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் ஊசி மூலம் உட்செலுத்தப்பட்ட ரசாயனங்கள் காரணமாக இருக்கலாம். அத்தகைய பழங்களை வெட்டும்போது வழக்கத்தை விட சிவப்பாக காணப்படும். சிறிது நேரத்திற்கு பிறகு அதில் இருக்கும் ரசாயனம் காரணமாக தசைப்பகுதி பாதிப்புக்குள்ளாகும்.

மறுநாள் பார்த்தால் அழுகிபோய் இருக்கும். அல்லது நுரை போல் நீர் வெளியேறும். இந்த அறிகுறிகளை கொண்டே தர்ப்பூசணியில் ரசாயனம் கலந்திருப்பதை கண்டறிந்துவிடலாம். தர்ப்பூசணியை வெட்டிய பிறகு அதன் நடுவில் துளைகளோ, விரிசலோ தென்பட்டால் அதுவும் ரசாயனம் உட்செலுத்தப்பட்டதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

 இயற்கையாகவே பழுத்த பழத்தில் அதிக துளைகள், கீறல்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. தர்ப்பூசணி பழங்களை சில வாரங்கள் சேமித்துவைத்தாலும் கெட்டுப்போகாது.

அதனால் கடைகளில் வாங்கும் தர்ப்பூசணி பழங்களை இரண்டு, மூன்று நாட்களுக்கு பிறகு சாப்பிடுவது நல்லது. தர்ப்பூசணியை வெட்டும்போது மேற்பரப்பில் இருந்து ஏதேனும் நுரையோ, நீரோ வெளியேறினால் அது ரசாயனம் கலக்கப்பட்டது என்பதை கண்டறிந்துவிடலாம்.

Post a Comment

0 Comments