உடம்புல இருக்குற அதிகமான கொழுப்பு வேகமா குறையணுமா? அப்ப பூண்டை இப்படி சாப்பிடுங்க...!

garlic


லாக்டவுன் காலத்தில் வீட்டிலேயே இருந்து வாய்க்கு ருசியாக வயிறு நிறைய சாப்பிட்டு பலருக்கும் தொப்பை வந்திருக்கும். என்ன சரிதானே? ஒருவரது உடல் எடையை அதிகரிப்பது என்பது சுலபமான ஒன்று.

 ஆனால் அதைக் குறைப்பது தான் மிகவும் கடினமான செயல் மற்றும் அதற்காக கடுமையாக போராடி வேண்டியிருக்கும்.

டயட் மற்றும் உடற்பயிற்சியை அன்றாடம் மேற்கொள்வதன் மூலம் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைத்து தட்டையான வயிற்றைப் பெற பல மாதங்கள் ஆகும்.

 ஆனால் நீங்கள் பழைய உடலமைப்பை வேகமாக பெற நினைத்தால், பூண்டு நீரைக் குடியுங்கள். ஆம், இது கேட்பதற்கு உங்களுக்கு விசித்திரமாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் இது சிறப்பான பலனைத் தரும்.

பூண்டின் குணங்கள் பூண்டு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் மிகச்சிறப்பான பொருட்களில் ஒன்று. ஒருவர் அன்றாட உணவில் பூண்டை அதிகம் சேர்த்து வந்தால், பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம்.

 உலகெங்கிலும் சமையலில் பயன்படுத்தப்படும் ஓர் முக்கிய பொருள் தான் பூண்டு.

 குறிப்பாக இந்திய உணவுகளில் இது கட்டாயம் இடம் பெறக்கூடிய ஒரு பொருளும் கூட. பூண்டு நல்ல மணத்தைக் கொண்டதால், இது உணவிற்கு ஓர் நல்ல மணத்தைக் கொடுக்கிறது. பூண்டு ஊட்டச்சத்துக்களின் கிடங்கு என்பது பலருக்கும் தெரியாது.

 இது உடல் எடை குறைப்பதில் இருந்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என்று பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது.

இப்போது நாம் அசிங்கமான தொப்பையைக் குறைக்க பூண்டை எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பது குறித்து தான் காணவிருக்கிறோம். வாருங்கள் பார்ப்போம்.

எடை இழப்பில் பூண்டு பூண்டில் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் பி6 மற்றும் சி மற்றும் மாங்கனீசு போன்றவை அடங்கியுள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் முக்கியமானவை மற்றும் எடையைக் குறைக்க வழிவகுப்பவை.

ஒருவர் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையுடன் பூண்டை உட்கொண்டு வந்தால், ஒரே வாரத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பூண்டு எப்படி எடையைக் குறைக்க உதவுகிறது? * பூண்டில் கொழுப்புக்களை எரிக்கும் உட்பொருட்கள் உள்ளது. இது உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை குறி வைத்து, தேவையில்லாத கொழுப்புக்களை உருகுவதற்கு தூண்டிவிடும்.

 * பூண்டு உடலை சுத்தம் செய்யும் செயல்முறையிலும் முக்கிய பங்காற்றுகிறது. இதனால் செரிமான ஆரோக்கியம் மேம்பட்டு, உடல் எடையை வேகமாக குறைக்க வழி செய்கிறது.
 * பூண்டிற்கு பசியுணர்வைக் கட்டுப்படுத்தும் பண்புகள் உள்ளது. ஆகவே அன்றாடம் இதை அதிகமாக உணவில் சேர்ப்பதன் மூலம், அளவுக்கு அதிகமாக உணவு உண்பது தடுக்கப்படுவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.
 * பூண்டு உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் மற்றும் ஆற்றல் அளவை சீராக பராமரித்து ஒருவரை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். இதனால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை சிறப்பாக குறையும்.

Post a Comment

0 Comments