'போலீஸ் தாக்கி இளைஞர் பலி...' 'மாஸ்க் போடலன்னு...' 'நடந்த கொலைவெறி தாக்குதல்' - சாத்தான்குளத்தில் நடந்தை போல் மற்றுமொரு சம்பவம்...!

Post a Comment

ஆந்திராவில் மாஸ்க் அணியாமல் சென்ற இளைஞரை போலீஸ் எஸ்.ஐ ஒருவர் தாக்கியதில், உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வரும் காரணங்களால் மத்திய  மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களுக்கு பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிவதும் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சீராலா நகரில் கிரண்குமார் என்னும் இளைஞர் ஒருவர் கடந்த 19-ம் தேதி முகக் கவசம் அணியாமல் கிரண் குமார் மற்றும் அவரது நண்பர் எஸ். ஆபிரகாம் ஆகியோர் பைக்கில் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளனர். சாலையில் மடக்கிய போலீசார் முகமூடி அணியாததற்காக அபராதம் விதிப்பதற்கு பதிலாக, எஸ்.ஐ. மற்றும் அவரது கான்ஸ்டபிள்கள் கிரண் குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் இரக்கமின்றி தன் மகனை அடித்ததாகவும்  கிரண் குமாரின் தந்தை மோகன் ராவ் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல், காவல்துறையினர் ஆபிரகாமையும் அடித்ததாக மோகன் ராவ் குற்றம் சாட்டினார்.

பலத்த காயமடைந்த கிரண்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தார். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி கிரண் குமார் பரிதாபமாக இறந்துள்ளார்.


போலீசார் அடித்ததால் தான் கிரண்குமார் இறந்ததாக கூறப்படும் சம்பவத்தை மறுத்த சிராலா பகுதியின் காவல் நிலைய ஆய்வாளர் ஃபிரோஸ், கிரண் குமார் மற்றும் ஆபிரகாம் ஆகியோர் மது குடித்துவிட்டு வண்டி ஒட்டியதாகவும் அப்போது காவல்துறையினர் தங்கள் பைக்கை தடுத்து நிறுத்தியபோது, ​​கிரண் குமார் மற்றும் ஆபிரகாம் ஆகியோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் காவல்துறை வாகனத்தில் கிரண் குமார் மற்றும் ஆபிரகாம் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லும் போது ​​கிரண் குமார் வாகனத்திலிருந்து குதித்து இறந்தார் என கூறியுள்ளார்.

இருப்பினும் கிரண்குமாரின் தந்தை மோகன் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார், நடந்த சம்பவங்களை விசாரிக்க ஒரு குழுவினையும் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் இறந்த கிரண்குமாரின் குடும்பத்திற்கு ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ரூபாய் 10 லட்சம் இழப்பீடாக அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் நடந்த சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு போல ஆந்திராவில் மிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter