யோக்யன் மாதிரி நடிப்பு தான். பிரபல அரசியல் தலைவரை விமர்சித்த இளம் நடிகை ! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

Post a Comment
ciman vijalakshmi issue
சினிமா என்றாலே அது இது என பல விஷயங்கள் உள்ளுக்குள் நடந்துக்கொண்டுதான் இருக்கும். சில உண்மையாக இருக்கும். பல பொய்யாக, புரளியாக, இட்டு கட்டி பிரபலமடைவதற்காக இருக்கும். ஒரு சில நேரங்களில் குறிப்பிட்ட நடிகர் நடிகைகள் தங்களுடைய இமேஜை ஸ்பாய்ல் செய்து, நெகடிவ் விளம்பரம் மூலம் தங்களுடைய மார்க்கெட் சரிவை சரிகட்ட ஆள் வைத்து பொய்யான தகவல்களை பரப்பி விடுவதும் உண்டு. 

சினிமா ஒரு பெரிய துறை என்பதால் பல லட்சக்கணக்கானவர்கள் அதில் இயங்கி கொண்டுதான் உள்ளனர். வெளியில் சிலர் மட்டுமே அனைவருக்கும் பெரிதாக தெரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் பிரபலமாகிவிடுகின்றனர். 

திறமையானவர்கள், ரெகமெண்டேசன் கிடைக்காமல், அவர்களை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்து கொண்டிருப்பார்கள். திடீரென ஒரு சில படங்கள் அவர்களை தூக்கி விட்டதுடன் மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு சென்று உயரத்தில் உட்கார வைக்கும். அதுபோலதான் சினிமா பேக்ரவுண்ட் இல்லாதவர்கள் சினிமாவில் ஜெயிக்கிறார்கள். அந்த வகையில் பிரபல அரசியல் வாதியும், நடிகரும், இயக்குனருமான சீமான் பிரபலமானார். 

சமீபத்தில் அவரைப் பற்றிய அவதூறுகள் பல வந்த வண்ணம் உள்ளது. நடிகை விஜய லட்சுமி கூட சமீபத்தில் தன்னுடைய தற்கொலை முயற்சிக்கு காரணம் சீமான் தான் என ஒரு அதிரடி வீடியோ வெளியிட்டிருந்தார். 

இவர் பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர். கடந்த சிலநாட்களுக்கு முன் சீமான் பற்றி பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமுற்ற நாம் தமிழர் தொண்டர்கள் நடிகை விஜயலட்சுமியை தரக்குறைவாக திட்டி தீர்த்தனர். இதனால் மனம் நொந்து போன விஜய லட்சுமி தன்னை சீமான் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டார் என குற்றம் சாட்டினார். 

அவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இதை பொறுக்க முடியாத சீமான் ஆதரவாளர்கள் இவரை கடுமையாக விமர்ச்சித்து, கண்ட கண்ட வார்த்தைகளை பிரயோகித்து வந்தனர். 

இதனால் மனமுடைய விஜய லட்சுமி நேற்று, ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இனிமேல் உயிரோடு இருக்க முடியாது என்றும், அதிக இரத்த அழுத்திற்கு பயன்படுத்தும் மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொண்டார். இனி நான் உயிரோடு இருக்க மாட்டேன். என்னை ஏமாற்றிய சீமானை சும்மா விடாதீர்கள் என்று கண்ணீர் விட்டு அழுது வீடியோ போட்டிருந்தார்.
 
இந்நிலையில் அவரை குடும்பத்தினர் காப்பாற்றி தனியார் மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். தற்பொழுது சிகிச்சைப் பெற்று வரும் அவர் சீமானை சும்மா விடாதீர்கள். என்னுடைய தற்கொலை முயற்சிக்கு அவர்தான் காரணம். அவர் என்னை ஏமாற்றி விட்டார். தப்பிக்க விட்டு விடாதீர்கள் என்று உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார். 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter