மாஸ்டர் படம் எப்படி இருக்கு..? இயக்குநரின் விமர்சனம்..! ரசிகர்கள் படுகுஷி..!

Post a Comment

பிகில் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தளபதி விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை, இயக்குநர் லோகோஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ளார்.

விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு சினிமா ரசிகர்களும் ஆவலாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், படத்தை பார்த்து ஒரு சில வார்த்தைகளை பகிர்ந்துள்ளார். அதில், நான் போஸ்ட் புரொடக்ஷன் பணியின்போது, மாஸ்டர் படத்தை 10 முறை பார்த்துவிட்டேன்.

இருப்பினும் முதன்முறை பார்க்கும் அனுபவமாகவே இருக்கிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு சினிமா ரசிகர்களுக்கும் இந்த படம் நல்ல அனுபவத்தை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்கள், இந்த வார்த்தைகளை தொடர்ந்து மேலும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter