வெப் தொடராகும் வீரப்பன் வாழ்க்கை ! ஹீரோ யார் தெரியுமா?


இரண்டு, மூன்று மாநிலங்களையே அதிர வைத்த தமிழன் சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் வாழ்க்கை தற்பொழுது டிவி தொடராக வெளியாக விருக்கிறது. அதில் வீரப்பனாக யார் நடிக்கிறார் தெரியுமா?

வீரப்பன் யார்? அவன் எப்படி சந்தனக்கட்டை கடத்தலில் ஈடுபட்டான். அந்த தொழில் செய்யும்பொது யாரெல்லாம் அவனுக்கு உதவினார்கள். அரசியல் பிரமுகர்களின் ஆதரவு இருந்ததா? அப்படியென்றால் அவர்கள் யார்? ஏன் அவனை பிடிக்கச் சென்றவர்களை சிறைபடுத்தி, கொன்றான்? உண்மையிலேயே அவன்தான் கொன்றானா? அல்லது அவனது பெயரில் வேறு யாராவது அவர்கள் கொன்று விட்டு, அவன் மீது பலி போட்டார்கள் என்ற சுவராஷ்யமிக்க தகவல்களை தாங்கி வரும் தொடராக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை ஏற்கனவே ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் வனயுத்தம் என்ற பெயரிலும் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற பெயரிலும் திரைப்படங்களாக வெளிவந்தன. வனயுத்தம் படத்தில் வீரப்பனாக கிஷோரும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுனும் நடித்து இருந்தனர். இந்த படம் தணிக்கை குழுவின் எதிர்ப்பில் சிக்கி பல காட்சிகளை நீக்கிய பிறகே திரைக்கு வந்தது.

இந்த நிலையில் வீரப்பன் வாழ்க்கை கதையை வெப் தொடராக எடுக்கப் போவதாக டைரக்டர் ஏ.எம்.ஆர். ரமேஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “வன யுத்தம் படத்தில் வீரப்பன் வாழ்க்கை கதையை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. நிறைய காட்சிகளை தணிக்கை குழுவினர் நீக்கி விட்டனர். இதனால் வெப் தொடராக எடுக்க இருக்கிறேன்.

வெப் தொடருக்கு தணிக்கை இல்லை என்பதால் வீரப்பனின் முழு வாழ்க்கையையும் தொடரில் கொண்டு வருவேன். போலீஸ் அதிகாரிகள், வீரப்பனுடன் பழகியவர்கள் போன்றோருடன் பேசி நிறைய தகவல்கள் திரட்டி வைத்துள்ளேன். அவை அனைத்தும் வெப் தொடரில் இடம்பெறும்.

இந்த தொடரில் வீரப்பன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடிக்கிறார். மேலும் பலர் நடிக்க இருக்கிறார்கள். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி படப்பிடிப்பு தொடங்கும். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த தொடர் வெளிவரும்” என்றார்.

மிகப்பெரிய வெற்றி சீரியலாக இது அமையும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.



Post a Comment

0 Comments