மன்னிப்பு' கேட்கிறேன்... நான் அந்த 'கட்சிக்கு' செல்லவில்லை... நடிகை குஷ்பூ விளக்கம்!


கட்சி மாறுவதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு சகஜம். ஆனால் நடிகர் நடிகைகளுக்கும் அது இப்போது பொருந்தும். ஒரு கட்சியில் ஏதேனும் பிரச்னை என்றால், உடனே எதிர் கட்சிக்கு தாவி, அவர்களுடைய பிரச்னைகளை தீர்க்க, அதை மறைக்க என எத்தனையோ தில்லாலங்கடி வேலைகளை செய்கின்றனர்.

குறிப்பாக ஆளுங்கட்சிக்கு தாவுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அந்த வகையில் நடிகை குஷ்பூ முதலில் திமுகவிலிருந்து, காங்கிரஸ் க்கு கட்சிக்கு தாவினார். கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இணைவதாக குறிப்பிட்டிருந்தார். இப்பொழுது

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஆளும் BJP கட்சியில் இணைவதாக அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் குஷ்பூ ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கு நாடு முழுவதும் ஏராளமான பிரபலங்கள் ஆதரவளித்து வருகின்றனர். அந்த வகையில் இதை வரவேற்பதாக தனது ட்விட்டரில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பூ தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சி புதிய கல்விக்கொள்கையை விமர்சனம் செய்த நிலையில், குஷ்பூவின் இந்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.

இந்த நிலையில் தன்னுடைய ட்வீட் குறித்து நடிகை குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார். அதில், ''புதிய கல்விக்கொள்கையில் தனது நிலைப்பாடு, கட்சியிலிருந்து வேறுபடுகிறது. அதற்காக நான் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் நான் தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவையாக இருப்பதை விட உண்மையை பேசுகிறேன்.

நான் பாஜகவுக்கு செல்லவில்லை , என் கருத்து கட்சியிலிருந்து வேறுபட்டிருக்கலாம் ஆனால், நான் சொந்த சிந்தனை கொண்ட ஒரு தனிநபர். புதிய கல்விக்கொள்கையில் சில இடங்களில் குறைகள் இருப்பினும், மாற்றத்தை நேர்மறையுடன் பார்க்கிறேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.

Post a Comment

0 Comments