பீட்ரூட் கோதுமை கஞ்சி செய்வது எப்படி?

Post a Comment
Beetroot wheat porridge


டயட்டில் இருப்பவர்களுக்கும், வயதானவர்களுக்கும் இந்த பீட்ரூட் கோதுமை கஞ்சி மிகவும் நல்லது. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :

பீட்ரூட் - கால் கப்
கோதுமை கஞ்சி மாவு - 4 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
தக்காளிச் சாறு - கால் கப்
இஞ்சி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப.

கோதுமை கஞ்சி மாவு செய்ய:

முழு சம்பா கோதுமை - கால் கிலோ
எள் - 50 கிராம்
பொட்டுக்கடலை - 150 கிராம்

(கோதுமை எள்ளை வெறும் வாணலியில் குறைந்த தீயில் வறுத்து எடுத்து பொட்டுக்கடலை சேர்த்து நைஸாக அரைக்கவும். இதை சலித்து வைத்துக்கொண்டு நீண்ட நாள் பயன்படுத்தலாம்).

செய்முறை:

ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பீட்ரூட்டை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

சதுரமாக நறுக்கிய பீட்ரூட்டை உப்பு போட்டு வேகவைக்கவும்.

கோதுமை கஞ்சி மாவுடன் 3 கப் நீர்விட்டுக் கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.

கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சீரகத்தூள், தக்காளிச் சாறு, பச்சை மிளகாய், இஞ்சி வெந்த பீட்ரூட் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.

பளபளவென கஞ்சியாக வரும்போது அடுப்பை அணைக்கவும்.

சத்தான பீட்ரூட் கோதுமை கஞ்சி ரெடி.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter