நிஜ வாழ்க்கையில் புதிய அவதாரம் எடுக்கும் ‘சியான்’ விக்ரம்.!

Post a Comment

துருவ் விக்ரம் உட்பட விக்ரமின் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் இணையைருக்கும் புதிய உறுப்பினரை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

‘சியான்' என்று அன்போடூ அழைக்கப்படும் நடிகர் விக்ரம் கோலிவுட்டின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உண்மை. தனது கதாப்பாத்திரத்துக்கு நியாம் செய்வதற்காக எந்த எல்லைக்குக்கும் செல்வார்.

தன் உடலையும் எந்த விதத்திலும் மாற்றியமைக்கக்கூடிய மிகச் சொற்பமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அதற்கு சான்றாக ‘ஐ', பிதாமகன், தெய்வத் திருமகள், சேது என ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகளை முன் வைக்கலாம்.

விக்ரம் இப்போது கோலிவுட்டின் அனைத்து இளம் நடிகர்களுக்கும் போட்டியாக இருக்கிறார் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள ‘கோப்ரா' படத்திலும் ஏக்கப்பட்ட அபாயகரமான சவாலான காட்சிகளில் நடித்துள்ளதாக சமீபத்தில் அப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து செய்திகளி வெளியிட்டதை அறிவோம்.

இன்னும் இப்படத்தின் சில காட்சிகள் பாடமாக்கப்பட வேண்டிய நிலையிலும், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ஏகபோகமாக அதிகரித்துள்ளதை ரசிகர்களிடையே காணலாம்.

இதற்கிடையில், சியான் விக்ரமுக்கு ஒரு ப்ரொமோஷன் கிடைக்கவுள்ளது, ஆனால் அது அவரது தொழில்துறையில் அல்ல. அதாவது, இப்போது அவரது மகள் அக்ஷிதா கர்ப்பமாக இருப்பதால் சியான் தாத்தாவாகப் போகிறார்.

விக்ரமின் மூத்த மகள் அக்ஷிதா மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் மனு ரஞ்சித்தை 2017-ஆம் ஆண்டு மணந்தார். துருவ் விக்ரம் உட்பட விக்ரமின் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் இணையைருக்கும் புதிய உறுப்பினரை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

‘கோப்ரா'வுக்குப் பிறகு விக்ரம், மணி ரத்னத்தின் ‘பொன்னியன் செல்வன்' படத்திலும், பின்னர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘சியான்60' படத்திலும் நடிக்கவுள்ளார். சியான்60-ல் துருவ விக்ரமும்  நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தகது.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter