தெறிக்கவிடும் தெறி பாடல் ! 7.5 கோடி பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை !! (வீடியோ உள்ளே )

Post a Comment

நடிகர் விஜய் நடித்து, சூப்பர் டூப்பர் ஹிட்டான தெறி படத்தில் வரும் "இனா மீனா டீகா" பாடல் யூ டியூப்பில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்துக்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

செல்லம்மா பாடல் - டான்ஸ் சவால் - ஆர்வம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தில், செல்லம்மா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படக்குழு டான்ஸ் சவால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதையடுத்து ஆர்வமுடன் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி, தங்களது வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படம் - டிரெய்லர் விரைவில் வெளியாகும்- படக்குழு

நடிகர் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் கதாநாயகனாக  சந்தானம் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்கிறார். சந்தானத்துக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது.நடிகர் ராம் சரண் மனைவி, யானையை தத்தெடுத்தார்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரண், தந்தை போல் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். இந்நிலையில் அவரது மனைவியும், அப்போலா மருத்துவமனையில் துணை தலைவருமான  உபாசனா காமினேனி, ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் ஒரு யானையை தத்தெடுத்துள்ளார்.

"மறுவார்த்தை பேசாதே" பாடலை பாடிய நடிகை

ராஜா-ராணி படத்தில், துணை நடிகையாக வந்த தன்யா, "மறுவார்த்தை பேசாதே" என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


டெனட் - திரைப்படம் ரிலீஸ் தேதி மாற்றம்பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டஃபர் நோலனின், டெனட் திரைப்படம், ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் என, பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. இந்தப் படத்தின் கரு டைம் ட்ராவல் இல்லாமல் ஆனால், டைம் இன்வர்ஸ் என்ற அறிவியல் கோட்பாட்டை வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக படத்தின் டீஸர் வெளியானபோது, 'டெனட்' படம் உலகம் முழுவதும் ஜூலை 27ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ், 'டெனட்' ஜூலை மாதம் 31ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவித்து தற்போது அதனை ஆகஸ்ட் 12 ஆக மாற்றியுள்ளது.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter