இதோ அதோ என போக்கு காட்டிய பிக்பாஸ் 4 வந்தே விட்டது ! புதிய தகவல் உள்ளே !!!

Post a Comment

இந்தியத் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் படு ஹிட். வீட்டில் சோறு திங்கிறார்களோ இல்லையோ, இந்த நிகழ்ச்சியை பார்த்து விட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள்.

அந்தளவுக்கு பிரபலமான நிகழ்ச்சியாக மக்கள் மனதில் நின்றுவிட்டது. தற்பொழுது ஹிந்தியில் நடிகர் சல்மான்கான் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். ஹிந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது.

அந்த பிரபலமான நிகழ்ச்சியை தமிழ், தெலுங்கில் 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்கள். தெலுங்கில் முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி, மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கினார்கள். நான்காவது சீசனையும் நாகார்ஜுனாதான் தொகுத்து வழங்க உள்ளார்.

தெலுங்கில் இந்த நான்காவது சீசனுக்கான வேலைகள் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டன. எந்தெந்த பிரபலங்கள் பங்கு பெற உள்ளார்கள் என சில தகவல்களும் வெளியாகி உள்ளன.

கொரானோ பாதிப்பு தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் பெரிய அளவில் இல்லை என்பதால் அங்கு டிவி படப்பிடிப்புகள் ஏற்கெனவே நடந்து வருகின்றன. அதனால், இந்த வருட பிக் பாஸ் சீசனை வழக்கம் போல நடத்த அவர்கள் தயாராகிவிட்டார்கள்.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஸ்டார் மா டிவி நேற்று வெளியிட்டது.

கடந்த வருடம் ஜுலை மாதம் 21ம் தேதி ஒளிபரப்பு ஆரம்பமானது. இந்த வருடம் கொஞ்சம் தள்ளி ஆகஸ்ட்டில் ஒளிபரப்பாக உள்ளது. மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter