15 கோடி ரூபாய் அபேஸ் செய்து, சுஷாந்தை தற்கொலை மனநிலைக்குத் தள்ளிய காதலி ! வெளியான ரகசியம் !!!

Post a Comment
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில், அவரது தந்தை சுஷாந்தின் காதலி மீது புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுஷாந்த சிங் தற்கொலையில் பரபரப்பு திருப்பம்

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வந்த சுஷாந்த் சிங், அண்மையில் தற்கொலை செய்து கொண்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலிவுட் சினிமாவில் நிலவும் Nepotism-தான் இதன் காரணம் எனவும், சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் கூறப்பட்டது.

இதனிடையே சுஷாந்த்தின் காதலியான ரியா சக்ராபொர்த்தி மீது, அவரது தந்தை காவல்துறையில் புகாரளித்திருப்பதுடன், அதன் முதல் தகவல் அறிக்கையையும் தற்போது வெளியிட்டுள்ளார்கள். அதில், ரியா சக்ராபொர்த்தி, ரூபாய் 15 கோடியை சுஷாந்தை ஏமாற்றி, வேறு ஒரு அக்கவுன்ட்டுக்கு மாற்றியுள்ளதாக அவர் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

மேலும் ரியாவும் இன்னும் சிலரும் சேர்ந்து கொண்டு, தனது மகனுக்கு பொருளாதார ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் அழுத்தங்கள் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஷாந்த சிங் தற்கொலையில் பரபரப்பு திருப்பம்

இதுமட்டுமின்றி, 2019-ஆம் ஆண்டு வரை சுஷாந்திற்கு எந்த மன அழுத்தமும் இல்லை. அப்படி ஏற்பட்டிருந்தால், அவர் ஏன் அதை குடும்பத்திடம் இருந்து மறைக்க வேண்டும், இந்த விவகாரத்தில் ரியாவேதான் மருத்துவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் சொல்லிய மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளைதான் சுஷாந்த் எடுத்து கொண்டுள்ளார்.

அதனால் சுஷாந்திற்கு மருத்துவம் பார்த்ததாக சொல்லப்படும் மருத்துவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் எனவும், ரியா கடைசியாக சுஷாந்திடம் இருந்து செல்லும் போது, அவரின் க்ரெடிட் கார்டு, லேப்டாப், இன்னும் சில மெடிக்கல் ஃபைல்கள் உள்ளிட்டவற்றை எடுத்து சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் அவரது காதலி மீது முன் வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டுகள், இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter