தலை அரிப்பு குணமாக ஜாதிப் பூ தைலம் செய்முறை - thalai arippu neenga tips in tamil

தலை அரிப்பு நீங்க  ஜாதிப் மல்லி பூ தைலம் செய்முறை


தலையில் அரிப்பு ஏற்பட காரணம்

நாம் அன்றாடும் பயன்படுத்தும் சோப்பு, சாம்பு முடியிலும் தலையில் இருக்கும் தோலிலும் உள்ள எண்ணெய் பசை தன்மையை நீக்கி வறட்ச்சியாக்கி விடுகிறது. தலை



தலைக்கு எண்ணெய் பயன்படுத்தாமல் இருப்பது, உடல் சூடு, கலர் ரசாயனங்களை பயன்படுத்துவது, உடல் சூட்டினை அதிகபடுத்தும் உணவுகளை அதிகம் உண்பது போன்ற காரணங்களால் தலை அரிப்பு, பொடுகு உண்டாகிறது. சில சமயம் குடல், இறைபை சார்ந்து நோய் தாக்கம் உண்டாகும் போது இவ்வாறு ஏற்படலாம்.

ஜாதிப் பூ தைலம்

பேன், பொடுகு, தலை அரிப்பு போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடவும் அதிகப்படியான உடல் சூட்டினை தவிர்க்கவும் இயற்க்கையன வழிகளை நாடுவது மிக சிறப்புடையதாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்ட  ஜாதிப் பூ தைலம் மேற்சொன்ன பாதிப்புகளில் இருந்து தலை முடி, தோல் பகுதியை பாதுகாத்து பல நன்மைகளை செய்கின்றது. மேலும் கூந்தலுக்கு நல்ல வசானையை தருகிறது.

thalai arippu gunamaga

ஜாதிப் பூ தைலம் செய்ய தேவையான பொருட்கள்

  1. ஜாதிப் மல்லி பூ 300 கிராம்
  2. மல்லிகை பூ 150 கிராம்
  3. பன்னிர் ரோஜா 150 கிராம்
  4. மகிழம் பூ 150 கிராம்
  5. சென்பக மொட்டு 150 கிராம்
  6. செம்பருத்தீ பூ 150 கிராம்
  7. தாமரை பூ 150 கிராம்
  8. தேங்காய் எண்ணெய் 1 லிட்டர்

ஜாதிப் பூ தைலம் செய்முறை

சுத்தமான தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும் சூடானதும்  ஜாதிப் பூவை, மல்லிகை பூ, பன்னிர் ரோஜா, மகிழம்பூ, சென் பக மொட்டு, செம்பருத்தீ பூ, தாமரை பூ போட்டு ஓர் இரவு வைத்திருந்து அடுத்த நாள் முதல் சூரிய ஒளியில் 5 நாள் வைத்து பூவை பிழிந்து வடிகட்டி இதை தினசரி தலைக்கு தடவி வரவும்.

ஜாதிப் பூ தைலம் பயன்கள்

கூந்தல் வாசம் வீசும், முடி நன்றாக வளரும், சித்த பிரம்மை, மன கோளாறு, சிரங்கு, உடல் சூடு தீரும். தலை நமைச்சல், மனம் அமைதி பெறும்

Post a Comment

0 Comments