தாய்மார்களுக்கு பால் சுரக்க இந்த ஒரு தாவரம் போதும்.. அட டே இத்தனை நாள் இது தெரியாம போச்சே !!!

Post a Comment
தாய்மார்களுக்கு அதிக பால் சுரப்பு எடுக்க பல்வேறு உணவுகள்  மற்றும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது. அந்தக் கால பாட்டிமார்கள் உண்ட உணவும், அவர்கள் செய்த விவசாய வேலைகளும் இயற்கையாகவே அவர்களுக்கு அதிக பால் சுரக்கும் தன்மை உடலில் உண்டாகியது. இதனால் அப்பொழுது வளர்க்கப்பட்ட குழந்தைகள் தாய்ப்பால் பருகி, அற்புதமாக, ஆரோக்கியமாக வளர்ந்ததனர். ஆனால் இந்த இயந்திர உலகத்தில் அப்படி அல்ல.

thaipal surakka iyarkkai maruthuvam

உடனடி உணவுகளில் சேர்க்கப்படும் வேண்டாத விஷம் கலந்த நிறமிகள், வேதிப்பொருட்கள் போன்றவற்றால் உடல் கெடுவதோடு, மரபு சார்ந்த பிரச்னைகளுக்கும் வழி வகுக்கிறது. அது மட்டுமல்லாமல் இயற்கையான சில செயல்பாடுகளை உடலில் செய்ய முடியாத வண்ணம் உடல் ஹார்மோன் சுரப்புகளில் மாற்றத்தைத் ஏற்படுத்தி, இயல்பு நிலைக்கு எதிராக திரும்புகிறது. எனவேதான் தற்போதைய தாய்மார்களுக்கு அதிக பால் சுரக்காமல் குழந்தைகளுக்கு புட்டி பால் கொடுக்க வேண்டிய நிர்பந்த த்திற்கு ஆளாக நேரிடுகிறது.

thaipal surakka marunthu


ஆனால் அப்படி இல்லாமல் தற்போதைய தாய்மார்களுக்கு அதிக பால்சுரக்க நம் இயற்கை அன்னை பல்வேறு மூலிகைகளை நமக்கு விட்டு சென்றுள்ளது. நம் முன்னோர்கள், சித்தர்கள் அவற்றைக் கண்டறிந்து, பக்குவமாக அவற்றை எப்படி பயன்படுத்தினால், பலன் தரும் என்ற அரிச்சுவடியை நமக்கு வழங்கிச் சென்றிருக்கின்றனர். அந்த வகையில் பால்சுரக்க பயன்படும் ஒருவித தாவரத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடலைப் பலமாக்கும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்; தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்; இசிவை அகற்றும்; ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.



1. தண்ணீர்விட்டான் கிழங்கு பால் சேர்த்து அரைத்துக் காயவைத்து பொடி செய்து, தினமும் இரு வேளை சாப்பிட்டுவந்தால் நீரிழிவு குணமாகும்.

2. தண்ணீர்விட்டான் கிழங்குப் பொடியைப் பாலில் கலந்து குடித்துவந்தால் உடல் உஷ்ணம், வெட்டைச் சூடு குணமாகும்.

3. தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி – தலா 50கிராம் எடுத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு வேளை இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அனைத்துவிதமான காய்ச்சல்களும் குணமாகும்.

4. தண்ணீவிட்டான் கிழங்கு, பூனைக்காலி விதை, நெருஞ்சில், அமுக்கரா, சாலாமிசரி – தலா 100கிராம் எடுத்துப் பொடி செய்து தினமும் பாலில் கலந்து குடித்தால் ஆண்மைக்குறைவு, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

5. தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடலைப் பலமாக்கும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்; தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்; இசிவை அகற்றும்; ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.
femina

6. அழகிற்காக வளர்க்கப்படும் வகையும் உள்ளது. இது சிறுசெடி அமைப்பில் வளரும். இதனுடைய வேர்கள் பெரியதாக இருப்பதில்லை.

7. உடல் பலம் பெற தண்ணீர் விட்டான் கிழங்கைச் சேகரித்து, நீரில் கழுவி, மேல் தோல் நீக்கி, காயவைத்து தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூள் இரண்டு கிராம் அளவு, பசு நெய்யில் கலந்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர வேண்டும்.

8. ஆண்மை பெருக தண்ணீர் விட்டான் கிழங்கைக் காயவைத்து, தூள் செய்துகொண்டு, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள், ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வர வேண்டும்.

9. மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த நான்கு தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து பருக வேண்டும். தினமும் மூன்று வேளைகள், 5 நாட்களுக்குச் செய்ய வேண்டும்.

10. கால் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்கிலிருந்து சாறு எடுத்து, காலையிலும், படுக்கைக்குப் போகும் முன்பும், காலிலும், பாதத்திலும் பூச வேண்டும். குணமாகும் வரை சிகிச்சையைத் தொடரலாம்.

தண்ணீர்விட்டான் கிழங்கு பானம்:


பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளைக் கழுவி, தோல் நீக்கி, இடித்து, சாறு எடுக்க வேண்டும். ஒரு கோப்பை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து காலையில் பருக வேண்டும். 3 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம். இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும். இதனால், இளைத்த உடல் பெருக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பு அதிகமாகும்,

நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, வயிற்று எரிச்சல் ஆகியவையும் குணமாகும்.வேர்க்கிழங்குகள் மூலமாகவும் இனப்பெருக்கம் செய்யும். இவை, சேகரிக்கப்பட்டு மருத்துவத்தில் பயன்படுகின்றன. காய்ந்த நிலையில் இவை நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்.

இந்த ஒரு செடி மட்டும் இருந்தால் தாய்ப்பால் பல மடங்கு பெருகி, குழந்தைக்கு போதிய மடிபால் கிடைக்கும். குழந்தையும் வயிறு முட்ட குடித்து, போதிய போஷாக்கான சத்துக்களைப் பெற்று ஆரோக்கியமாக வளரும்.


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter