அல்சருக்கு மட்டுமல்ல...நீர் சத்து குறைபாடு, அஜீரண கோளாறுகள், முடி வளர, மூலிகை தைலம் என இது சித்த மருத்துவத்தில் பயன்படாத இடங்களே இல்லை

செவ்விளநீர் மருத்துவ நன்மைகள்


இத்தனை நாட்கள் இளநீர் பற்றி தெரிந்து கொண்டதெல்லாம் இது "அல்சர்" போக்கும் என்பதாகதான் இருக்கும். ஆனால் அதையும் தாண்டி "செவ்விளநீர்" செய்யும் பயன்கள் ஏராளம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பேதி, குடற்புழு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னைகள், தோல் சார்ந்த பிரச்னைகள், நீர் சத்து குறைபாடு, அஜீரண கோளாறுகள், முடி வளர, மூலிகை தைலம் என இது சித்த மருத்துவத்தில் பயன்படாத இடங்களே இல்லை என்று சொல்லலாம். 

செவ்விளநிர் என்றால் என்ன

ஆரஞ்சி நிறமுடைய இளநீரே செவ்விளநீர் என்று அழைக்கப் படுகிறது. இயல்பாக கிடைக்கும் பச்சை நிறமுடைய இளநீர்களை விட இனிப்பு சுவை அதிகமாக காணப்படுகிறது. பச்சை இளநீர் கிடைக்கும் அளவிற்க்கு செவ்விளநீர் கிடைப்பதில்லை. விவசாயிகள் செவ்வியத்தை அதிகம் பயிரிடுவது கிடையாது.

செவ்விளநிர் விலை 

இருந்து போதிலும் ஆங்காங்கே இளநீர் கடைகளில் இருப்பதை காண முடியும். சாதாரண பச்சை இளநீர் விலையை விட 10 முதல் 20 ரூபாய் கூடுதலாக விற்க்கப்படுகிறது..

sevilaneer payangal

கோவில்களில் அபிசேகத்திற்க்கு செவ்விளநிர் 

கோவில்களில் சுவாமியின் திரு உருவ சிலைக்கு பூஜைக்கு முன் அபிஷேகம் செய்யும் போது செவ்விளநீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனால் சுவாமி சிலையில் இருந்து வெளிப்படும் சக்திகள் மேலும் மேன்மை அடையவும், பாதுகாக்காவும் உதவுகிறது. கோவில் கும்பாபிசேகம் மற்றும் திருவிழ காலங்களில் செவ்விளநீர், பாலைகள், பிஞ்சுகள் குழையாக கட்டி தொங்கவிடுப்படுகிறது.


சித்த மருத்துவத்தில் செவ்விளநிர் பயன்

சித்த மருத்துவர்கள் பாஷாண மருந்துகளை சுத்தி செய்யவும், லேகியம், பாகு, செந்தூரம், சூரணங்கள், தைலம் முதலியன தயாரிக்கும் போது பச்சை இளநீர்களுக்கு பதில் செவ்விளநீர் பயன்படுத்துவதால் நல்ல பலனை கொடுக்கிறது என்றும் கூறுகின்றனர். இது பரம்பரை வத்தியர்களின் அனுபவ முறையாக இரகசியமாக பின்பற்றுகின்றனர்.

செவ்விளநிர் சத்துக்கள்

சாதாரணமான இளநீர்களை போலவே பொட்டாசியம், சோடியம், கால்சியம், இரும்பு, செம்பு, கந்தகம், மெக் னீசீயம் போன்ற தாது உப்புக்கள் அடங்கியும் அதன் அளவுகள் மேம்பட்டும் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

செவ்விளநீர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

செவ்விளநீர் தரத்தன்மை உணர்ந்த நாடுகள், பிற நாடுகளில் இருந்து அதிகளவு இறக்குமதி செய்துவருகிறது. இந்தியாவில் கேரளா, தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இருந்தும்  ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கையில் அதிகமாக பயிரிடபடுகிறது அங்கு தம்பிலி என்று அழைக்கின்றனர்.

செவ்விளநிர் பற்றிய சித்தர் பாடல்

"பித்தமொடு தாகம் பெருத்த வழினடையா
வெய்த்தலா யாச மிவையேகு நித்தியமுஞ்
செவ்விளநீ ருண்டக்காற் றீரும் பலகயமு
மவ்விளநீர் கொங்கைமின்னே யாய்"

சித்தர் பாடல்பொருள்

தினமும் செவ்விளநீரை அருந்தி வந்தால் பித்தம் ,தாகம், இளைப்பு, அயர்வு, பற்பல சயம், ஆகியவை தீரும். 

பேதி 

அனுபவ ரீதியாக மருத்துவர்கள் அதிபேதி உண்டானவர்களுக்கு செவ்விளநீரை பரிந்துரை செய்கின்றனர் இதனால் பேதி கட்டுப்படும் பேதியால் உண்டான கலைப்பு நீங்கும்.

குடல் புழு

காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகள் வாரம் இரண்டு முறை செவ்விளநீர் குடிப்பதால் குடல் பகுதியில் காணப்படும் குடல் புழுக்களை அழித்து மேலும் உண்டாவதை தடுக்கிறது.

உயர் இரத்த

உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து கட்டுக்குள் வைக்க உதவும்

சிறு நீரக பிரச்சனை

உடல் சூட்டை குறைக்கும், ஆண்களுக்கு விசேமானது, ஆண், பெண் சிறு நீரக தொற்றை கட்டுபடுத்தும். சிறு நீரக பாதை பிரச்சனைகளை நீக்கும்.

தோல் மென்மையாக

செவ்விளநிர் அருந்துவதால் தோல் மென்மையடைந்து புது பொழிவு உண்டாக்கும். முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கி, தோலுக்கு தேவையான பசைத் தன்மையுடன் வைக்க உதவுகிறது.

தோல் சார்ந்த நோய்கள் 

செவ்விளநீர் பூஞ்சைகள், வைரஸ் போன்றவற்றால் உண்டாகும் தோல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும் மருத்துவ தன்மை உள்ளது. 

முதல் உதவி பாணம்

நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டோருக்கு மிகச்சிறந்த முதல் உதவி பாணம்.

நீர்சத்து குறைபாடு

செவ்விளநிர் இளநீர் குழந்தைகள் அருந்துவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்சத்து குறைபாடு, மலக்கட்டு தீரும். 

ஜீரண கோளாறு

செவ்விளநீர் அருந்துவதால் இரைப்பை, சிறு குடல், பெருங்குடல் சார்ந்த நோய்களை கட்டுபடுத்தி ஜீரண சக்தியையும், குடல் சத்துக்களை உறிஞ்சும் தன்மையையும் அதிகப்படுத்தும்

முடி வளர

செவ்விளநிர் தேங்காயில் இருந்து எடுக்கப்பட்ட கலப்படம் இல்லாத எண்ணெய் தலை முடி உதிர்வதை தடுத்து முடி வளர்வதற்க்கு உறுதுணை செய்கின்றது

மூலிகை தலைம் 

செவ்விளநிர் எண்ணெய்யில் தலை முடிக்கு தேவையான மூலிகை தலைம் தயரிக்க பயன்படுத்தலாம்.

சாதாரண இளநீர் தானே என்று நினைக்காமல், இதில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளது நினைத்து, அடிக்கடி இளநீர் குடித்து வந்தால், உடலில் எந்த ஒரு நோயும், தீங்கும் அண்டாது என்பது இதன் மூலம் புலனாகிறது. 


Post a Comment

0 Comments